உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

69

வைப்பாட்டியாகவாவது இருக்கலாம்; எனக்குத் தோன்றிய மட்டில் அவள் கடைசியிற் சொன்னபடியாகத் தான் இருக்க வேண்டும்; ஏனெனில், அவவ்ளவு இரண்டகமாக நடப்பவள் நல்லொழுக் கத் துறைகளைக் கடைப்பிடிப்பாள் என்று எண்ண இடமில்லையே. அஃதப்படி யானாலும், அக்குதிரை பிரசித்தி பெற்ற கள்வர் தலைவன் நல்லானுக்கே உரிய தென்பதை அக்குதிரைக் காரக் கிழவன் தெரிந்து கொண்டது நிச்சயம். ஆனால், அவன் அப்பிராணியைத் தான் எவ்வாறு தெரிந்து கொண்டானென் பதைத் தானும் எனக்கு அறிவிக்கவில்லை யானும் அதனைத் தெரிந்து கொள்ளக் கவலைப்படவில்லை. தனக்கும் நல்லானுக்கும் ஒருகால் உண்டான சம்பந்தம் பிறரறியாமல் தன் மட்டில் வைத்திருக்க எண்ணினான் என்பதிற் சந்தேகமில்லை." என்றான் கேசரி வீரன்.

“நல்லது, அவ்விரகசியத்தை நீ தெரிந்து கொண்ட வுடனே; நீ எனக்கு அதனை அறிவியாதது ஏது காரணத்தால்?” என்று நீலலோசனன் கேட்டான்.

66

'ஆ! பெருமானே, தாங்கள் அந்நங்கை மீது அறிவுமயங்கி யிருந்தீர்கள் என்பதனை யான் காணவில்லையா?" அவள் அழகியாயும் நீங்கள் இளைஞராயும் இருந்தமையால் அது இயற்கையேயாம் - என்று கேசரிவீரன் மறுமொழி கூறுதற்குள்;

நீலலோசனன் பதைப்போடும் “புத்தன் அறிய நீ என்னைப் பிழைத்தறிந்தாய்! முதலிற் சில நிமிஷம் யான் மயங்கிய துண்டு - அல்லது யான் கலக்க முற்றதுண்டு; ஆனால் அவள் பார்வை யையும் மாதிரியையும் யான் நோக்கிய அளவில் அவ்வுணர்ச்சி மறைந்து போயிற்று” என்றான்.

கேசரிவீரன் இடைமறித்து “நல்லது நல்லது பெருமானே, ஏதோ யான் தங்களைத் தவறுதலாய் எண்ணினேன் - ஆயினும், ரு பாதி யான் சொல்லியதுண்மை என்பதைத் தாங்களு ம் ஒப்புக்கொள்ள வேண்டியதே; ஏனென்றால், விருந்தாட்டு மேசையின் பக்கத்திலே தாங்கள் அவள் மாயத்தில் முழுதும் வசப்பட்டிருந்தீர்களே!” என்றான்.

L

அதற்கு நீலலோசனன் "நாணயத்தோடும் நான் அதனை ஓப்புக்கொள்ளுகின்றேன்!” என்று வெட்கமுற்று “ஒரு கிண்ணந் திராட்சப்பழ ரசத்தை யான் பருகினேன்; அந்நங்கையும் அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/98&oldid=1581353" இலிருந்து மீள்விக்கப்பட்டது