உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் 13

அதிசாக்கிரதையுள்ள மனிதவகுப்பில் என்னைச் சேர்த்திருக் கிறீர்களன்றோ?" என்று கேசரி வீரன் கூறினான்.

நீலலோசனன் புன்சிரிப்போடு, “என் நல்லகேசரிவீர, பின்னுஞ் சொல்லவேண்டுவ தெல்லாஞ்சொல், நான் இது வரையிற் செய்ததைவிட இனிமேல் உன்னுடைய சாக்கிரதைக் குணத்தை மிகவுங் கவனித்துச்செல்வேன்.” என்றான்.

வியாக்கிரவீரன் தன்எசமானன் கூறிய உபசாரவுரையைப் பணிவோடு ஏற்றுப் பின்வருமாறு சொல்லப்புகுந்தான்:-

"கோபுரத்திற்கு இரண்டரைநாழிகை சவாரி தூரத்தி லிருந்த சிறிய ஒரு குடிசையின் கண்ணே நாம் நம்முடைய குதிரைகளுக்குத் தீனி தருவதற்காகத் தங்கியதை மாட்சிமை நிறைந்த தாங்கள் நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள். அங்கிருந்த குதிரைப் பாகன் குதிரை நோட்டத்தில் கைதேர்ந்தவனும், நேர்த்தியான பிராணியைப் பாராட்டுகின்றவனும் ஆன தந்திரமுள்ள ஒரு கிழவன். அவன் தன்கையிற் கொண்டுவந்த வெளிச்சத்தினாலே குதிரைகளைப் பரிசோதித்து வருகையில், அந்த நங்கை ஏறிவந்த அழகிய பிராணியின் சந்திலே வைக்கப்பட்ட சுடுதழும்பைப் பார்த்தான்; உடனே, அவன் வாயில் ஆச்சரியத்தோடுங் கூடிய சில சொற்கள் சடுதியிற் பிறந்தன. உடனே யானும் அவனை என்னவென்று வினவினேன். முதன் முதல் அவன் என்மேற் சந்தேகப்பட்டான்.மாட்சி நிறைந்த தாங்கள் இப்போது தெரிந்து கொள்ளப்போகும் விவரங்களால், அப்படிப்பட்ட நிலைமையில் அவன் ஐயுறவு கொண்டது. இயற்கையே யாகும் என்பது விளங்கும். ஆயினும், நான் அக்குதிரைக்காரக் கிழவனுக்கு நாங்கள் உண்மையுள்ள சனங்கள் என்று மெய்ப்பித்துக் காட்டினேன். அவனுக்குக் கைக்கூலி கொடுப்பதாகப் பின்னும் வாக்குறுதி செய்து, அவன் வாயினின்றே எல்லா விவரங்களும் தெரிந்து கொண்டேன். சுருங்கச் சொல்லுங்கால் எம்பெருமானே, அந்த நங்கை ஏறிவந்த அழகிய குதிரை திருடர் தலைவனான நல்லானுக்கே உரியது."

66

66

உடனே நீலலோசனன் “ஆ” என்று ஆச்சரியம் உற்று, அப்படியானால் அந்த நங்கை யார்?” என்று வினாவினான்.

66

"பெருமானே, எனக்கு அது தெரியாது. அவள் அவன் மனைவியாகவாவது, உட ன்பிறந்தாளாகவாவது அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/97&oldid=1581352" இலிருந்து மீள்விக்கப்பட்டது