உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

67

வந்து சேர்ந்தார்கள்; அச்சத்திரத்தி லுள்ளவர் களெல்லாம் நெடு நேரத்திற்கு முன்னே உறங்கப் போனார் களாயினும், புதிதாய் வந்த பிரயாணிகள் கூப்பிட்டவுடனே எழுந்து வந்து உதவி னார்கள். குதிரைகள் இலாயத்திற் சேர்ப்பிக்கப்பட்டன; நீலலோசன னுக்கும் அவன் துணைவர் களுக்கும் இசைவான தக்க அறைகள் சித்தஞ்செய்து தரப்பட்டன.

இப்போது கடைசியாக நீலலோசனன் தான் அறிந்து கொள்ளுவதற்கு மிக விழைந்த விவரங்களைத் தெரியப் பெறுதற்குச் சமயம் வாய்த்தமையால், அவை தம்மைத் தெரிந்து கொள்ளாமல் அவன் படுக்கைக்குக் செல்லக்கூட வில்லை. இராக்காலத் திடையிலே அதிவேகமாய்ச் சவாரி செய்து கொண்டு வந்தமையால், நீலலோசனனிடம் சிறிது தங்கியிருந்த தூக்க மயக்கமும் பறந்து போயிற்று; இழைந்தாற் போன்ற சிறியதலைவலியைத் தவிர மதுபான மயக்கத்தால் விளையுந் தீங்கு பிறிதொன்றும் அவன் அனுபவிக்கவில்லை. கேசரிவீரனும் வியாக்கிரவீரனும் அவ்விவரங்களைத் தெரிவிப்பதற்கு விருப்பம் அற்றவரல்லர்; பிறகு, அச்சத்திரத்திற் றம் இளைய எசமானனுக் கென்று விடப்பட்ட அறையின் கண்ணே அவ்விருவரும் உறங்கச்செல்வதற்கு முன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந் தனர்.

66

'அஃதெப்படியோ நான் அறியேன்,. முதலிலிருந்தே அந்த நங்கையை நாம் சந்தித்ததில் எனக்கு விருப்பமே இல்லை. ஒருகால் நீலகிரி நகரத்திற்குச்செல்லும் பாட்டையில் நம்மை விடுவதாக அவினயித்த அச்சுடுமூஞ்சிக் குடியானவனைப் பற்றி யான் கொண்ட அவநம்பிக்கை யாலும் ஐயுறவாலும் எனக்கு அஃது அப்படித் தோன்றியதோ, மாட்சிமை தாங்கிய தாங்கள் யான் சொல்வதை மன்னிக்கவேண்டும். தாங்கள் துணை வருவ தானால், தான் அதற்கு இசைவதாக அந்த நங்கை இலேசாக இணங்கிக் குறிப்புக் காட்டியதில் எதோ ஒரு புதுமை யிருப்பதாக எனக்குத் தோன்றியது. மேலும், பெருமானே., தங்களை வசியப் படுத்துவதற்காக அவ்வம்மை தங்களைப் பார்த்த பார்வையும் என் கவனத்தை விட்டு அகன்றிலது. என்றாலும், துணியப்படாத ஒருவித சஞ்சலத்தைத் தவிர வேறு ஒன்றும் என் மனத்தில் தோன்றவில்லை- உண்மை சொல்லுமிடத்து, அதற்காக என்னையேநான் நொந்து கொள்ள வேண்டிய வனாயிருக் கிறேன்; ஏனென்றால், மாட்சிமை நிறைந்த தாங்கள் உலகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/96&oldid=1581351" இலிருந்து மீள்விக்கப்பட்டது