உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் - 13

விவரங்களைத் தெரிந்து கொள்ள இடமில் லாமற் போயிற்று. ஆயினும் அவன் இன்னும் தன் சிந்தனையின் வழிப்பட்டே யிருந்தான். தான் வருங்கால் கோபுரத்தின்மேல் விருந்தாட்ட றையின் கதவுகள் திறக்கப் பட்டிருந்தபோது தன் துணைவர்கள் ஏதோபிசகான எண்ணத்தால் தவறு செய்து விட்டார்கள் என்று நடுங்கினானாயினும், அக்கோபுரத்திற்கு நல்லான் தன் கள்வர் கூட்டத்தோடும் வரப்போகிறா னென்பதைத் தன்னவர் எப்படி யறிந்தார்கள் என்று தான் தெரிந்திலனாயினும், பின்னர்ச் சில நிமிஷம் எழுந்தஆழ்ந்த சிந்தனையினால் அவர்கள் செய்தது நியாயமாகத்தா னிருக்கவேண்டு மென்றும், அங்கே ஏதோ துரோகம் நடந்திருக்க வேண்டுமென்றும் அவன் இனிதுணர்ந் தான். இன்னும் அந்நங்கை ஏதோ மோசமான கருத்துக் கொண்டிருந்தா ளென்பது, உறையினுள்ளே கொடுவாளானது இறுகப் பிணிக்கப் பட்டிருந்தமையினாலேயே நன்கு விளங்கிற்று. பின்னும் அவள் எவ்வளவு தந்திரமாகத் தன்படைக் கலத்தைப் பயனற்றதாகச் செய்யும் இசைவான சமயத்தை நாடித், தன்பக்கத்தே உணாப்பொருள் நன்றாகப்பரப்பிய மேசையின் கீழேகுனிந்து, தன்கொடுவாளைமுத்தமிட்டு விளையாடுவாள் போல மாயங்காட்டிய செய்கை முழுதும் நீலலோசனன்

L

நினைவுகூர்ந்தான்.

அதுமிகவும் இனியதோர் இராப்பொழு தாயிருந்தது; ஆகாயம் எங்கும் வான்மீன்கள் தொகுதி தொகுதியாக நிறைந்து, வெள்ளியசந்திரனை இனிது பின்பற்றி நின்றன. அஃது ஏறக்குறைய பகற்காலத்தைப்போல் அவ்வளவு வெளிச்ச முள்ளதாக இருந்தது; நீலலோசனனும் அவன் துணைவரும் குதிரைகளை அதிவேகமாகச் செலுத்திக் கொண்டுபோகும் அங்குள்ள நிலத்தோற்றம் எல்லாம் வெண்மையான ஒளி வெள்ளத்தின்கண் முழுகினாற்போலத் தோன்றின. இங்ஙனம் ஒரு நாழிகை நேரம் வரையில் இவர்கள் கடிவாளத்தை இழுத்துப்பிடியாமலே சவாரி போனார்கள். - கடைசியாக ஒரு பட்டினத்தின் கட்டடிடங்கள் அவர்கள் காட்சிக்குத் தென் பட்டன. இன்னும் அவர்கள் அப்பட்டின எல்லையில் வரும் வரையில் சவாரியின் வேகத்தைக் குறைக்கவேயில்லை; அவ் வெல்லைக்கு வந்தபிறகு தான் தாம்பத்திரமாய் வந்து சேர்ந்ததாக ணர்ந்தார்கள். சீக்கிரத்தில் வசதியான ஒருசத்திரத் தண்டை

AL

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/95&oldid=1581350" இலிருந்து மீள்விக்கப்பட்டது