உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

65

"நீலலோசன! - பெருமான் நீலலோசன!” என்றுபுலம்பற் குரலோடுங்கூவி “நான் இவ்வாறு நடத்தப்படுதலைக் காண உமக்கு மனம் வந்ததா" என்று மீனாம்பாள் உரத்துச் சொன்னாள்.

"வந்துவிடுங்கள் பெருமானே! சாரணர்கள்மேல் ஆணை வந்து விடுங்கள்! நாங்கள் செய்வது இன்னதென்று எங்கட்குத் தெரியும்.” என்று கேசரிவீரன் சடுதியிற் கூறினான்.

இச்சொற்களைக்கேட்டதும் விவரம் தெரிந்து கொள்ளு வதற்கு இப்போது நேரமில்லையென்பது உண்மை யென அந்தப் பௌத்த இளைஞன் மனத்திற்பட்டது; உடனே அதிவேகமாக அவன் தன் துணைவர் பின்னே படிக்கட்டின் கீழ் இறங்கினான். அவர்கள் வீட்டு முற்றத்திற்குப்போய்,, அங்கிருந்து குதிரை லாயத்திற்குச் சென்று. அங்கே அதனை அடுத்த ஓர் அறையில் வைக்கோற்படுக்கை மேற் கிடந்து உறங்கின குதிரைக்காரனைப் பார்த்தார்கள்.

66

"இப்படிச் செய்வதைவிட இம்மனிதனிடத்தில் நாம் வேறொன்றுஞ் செய்யவேண்டுவதில்லை” என்று கேசரிவீரன் சொல்லிக் கொண்டே அவ்வறைக்கதவை இழுத்துச்சாத்தித் தாழ்க்கோல் இட்டான்.

அந்த மூன்று குதிரைகளும் விரைவிற் சேண முதலியன இடப்பட்டன, அதன்பின்பு அவைகள் வீட்டு முற்றத் திற்குச் செலுத்தப்பட்டன; உடனே வியாக்கிரவீரன் கனமான ஒரு சாவியைக் கொண்டுவந்து பூட்டைத் திறந்து பெரிய வாயிற் கதவுகளையும் மலரத்திறந்தான். அடுத்த நிமிஷத்தில் அந்த மூன்று பிராயாணிகளும் அந்தக்கோபுர எல்லையைத் தாண்டிப் போனார்கள்.

சய்ய

"இப்போது நாம் நம்மிச்சைப்படி சவாரி வேண்டியதுதான், ஏனென்றால், ஏமாற்றிக்கொண்டு வரப்பட்ட நாம் இந்தப் பிரதேசத்தைப் பற்றிச் சிறிதும் அறியோமாகலின் என்று கேசரி வீரன் சொன்னான்’

அவ்விடத்தைவிட்டு அவர்கள் மிக வேகமாய்ச் சென்றார் கள்; அவர்கள் அவ்வாறு குதிரைகளைக் கடுவேக மாய்ச் செலுத்திக்கொண்டு சென்றமையால், நீலலோசனன் தான் தெரிந்துகொள்வதற்கு மிக்க ஆவலோடும் எதிர்பார்த்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/94&oldid=1581349" இலிருந்து மீள்விக்கப்பட்டது