உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் 13

உடனே கேசரிவீரன் துரிதமாய் “நாம் இந்தக் கோபுரத்தின் எல்லையைத் தாண்டிப் போவதற்கு முன்னே, நல்லான் தன் கொள்ளைக் கூட்டங்களோடும் மேற்பாய்ந்து வந்து விழாமலி ருந்தால் மாத்திரம்” என்று சேர்ந்து பேசினான்.

66

ஆ! நல்லானா?” என நீலலோசனன் திடீரெனக் கூறினான். இது கூடுமானதா? அந்த நங்கை அழகிய

மீனாம்பாள்

66

-

“வாருங்கள் பெருமானே" என்று கேசரிவீரன் உரத்துக்கூவி "இப்போது இவற்றையெல்லாம் விவரித்துச் சொல்லப் பொழுது இல்லை! உங்கள் கொடுவாள் இப்போது கையாளத் தக்க தாயிருக்கிறது! சமயத்தில் வேண்டியபோது அதனை எடுத்தாள உங்களுக்குப் பௌத்தன் வலிமை தரக்கடவன்!” என்று சொன்னான்.

"ஓ! நல்லது! எனக்குப் பலமிருக்கிறது. இப்போது நான் முன் போலவே ஆய்விட்டேன்!” என்று அப்பௌத்த இளைஞன் கூறினான்.

வியாக்கிரவீரன் கையில் வெளிச்சம் ஏந்திவர அவனும் அவன் உடன் வந்த உண்மையாளர் இருவரும் அறையைவிட்டு வெளிப்புறப்பட்டார்கள். விருந்தாட்டு நடந்தேறிய அறைக்குச் செல்லும் வழியின் எதிரே இவ்வறைக்கதவுந் திறப்பதாக நீலலோசனனுக்கு நினைவு வந்தது; அவ்விருந் தாட்டறையின் கதவு திறக்கப்பட்டபடியே யிருந்தது; அங்கேவிளக்குகள் எரிந்து

கொண்டிருந்தன; தின்பண்டங்கள் இனிதாக வைக்கப்பட்டிருந்த பலகையானது முன் நீலலோசனன் அதன் பக்கத்தில் உட்கார்ந்த போது இருந்தபடியே இருந்தது; இப்போது அவ்வறை யினுள்ளே அவன்பார்வை நுழைந்தபோது மீனாம்பாள் காலுங்கையும் கட்டப்பட்டுச் சாய்மானமெத்தைக் கட்டில் மேற் படுத்துக் கிடக்கவும், அங்கே அவளைச் சிறைப்படுத்துதற்கு வாய்ப்பாக அதனைச்சுற்றிலும் ஒரு கயிறு கட்டியிருக்கவுங் கண்டான்.

உடனே நீலலோசனன் தன்துணைவரை நோக்கி “நீங்கள் ஏதோ பயங்கரமான பிழை எண்ணத்தில் வருந்துவதாகத் தெரிகின்றதே” இந் நங்கைக்குச் செய்த மானபங்கம் பெருந் திகிலை உண்டாக்குகின்றதே! என்று கூறினான்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/93&oldid=1581348" இலிருந்து மீள்விக்கப்பட்டது