உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

63

பக்கத்தே நிகழ்ந்தவெல்லாம் தன் மனத்திற் றிடீரென நினைவுக்கு வரவே “ஆம்-இங்கே அது நடந்திருக்கத்தான் வேண்டும்” என்று நீலலோசனன் சொல்லுகையில் அவன்கை இயற்கை யாகவே தன் கொடுவாட் பிடியை நாடியது.

ஆ! நாடியும் என்னை! அதனை அவன் உறையினின்றும் இழு க்கக் கூடவேயில்லை. மிகுந்த பலத்தோடும் அதனைப் பிடித்து இழுத்தான்: ஆனாற் பயனில்லை! கத்தியின் இலையும் உறையும் உருகி ஒன்றாய்ப் போனது போல, அஃது அவ்வளவு அழுத்தமாக அதனுள் வைத்து இறுக்கப்பட்டிருந்தது, இப்படிச் செய்ததன் கருத்து என்னை? ஒரு தரம் பார்த்த பார்வையே அவ்விரகசியம் இன்னதெனத் தெரிவிப்பதாயிற்று. அக் கத்தியின் பிடியிலும் உறையின் மேற்பாகத்திலும் தந்திரமாய்ச் சேர்க்கப் பட்டிருந்த ஓர் இரும்புக் கம்பியானது, அக்கத்தியை அசைய வொட்டாதபடி இறுக்கி வைப்பதாயிற்று.

66

அதனை நான் அவிழ்த்து விடுகின்றேன். நாம் இந்தக் கோபுரத்தைவிட்டுப் புறப்படும் முன்னமே, நாம் மூவரும் இப்படைக்கலங்களைக் கையாள வேண்டியிருக்கும்.” என்று கேசரிவீரன் கூறினான்.

“வியாக்கிரவீரன்

வினவினான்.

எங்கே?” என்று நீலலோசனன்

இக்கேள்வி கேட்டு முடிவதற்குள் அங்கே கதவு திறந்தது, வியாக்கிரவீரனே நேரில் தோன்றினான்.

அவள் பத்திரமாக வைக்கப்பட் டிருக்கின்றாளா? என்று கேசரி வீரன் கேட்டான்; இப்படிக் கேட்ட போது இவன் நடத்தையும் பேச்சும் அவன் தான் நன்றாய் அறிந்த அச் சமயத்தின் அவசரத்தின் எல்லைக்குத் தக்கபடி சுறுசுறுப்பும் துரிதமும் வாய்ந்திருந்தன.

66

ஆம், அவள் பத்திரமாக வைக்கப்பட்டி ருக்கின்றாள்-- அந்தத் துரோகியான பெண்பிள்ளை!” என்று வியாக்கிய வீரன் மறுமொழி புகன்றான். “சாந்த நோக்கமுள்ளவனான வீட்டுக் காரனும் மேற் கொண்டு ஏதும் குறும்பு செய்யா வண்ணம் அவ்வாறே காலுங்கையும் கட்டப்பட்டு வலிவிழந்து கிடக்கின்றான். இனி நாம் குதிரைக்காரனைத் தான் ஒருகை பார்க்க வேண்டியிருக்கின்றது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/92&oldid=1581347" இலிருந்து மீள்விக்கப்பட்டது