உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

❖ 13❖ மறைமலையம் – 13

தின்ற ஒருவனைப் போல மந்தமாய் அரைவாசி மூடப்பட்ட கண்களோடும் பார்த்தான். தன்னை எழுப்ப முயல்வோன் ன்னனென்று கூட அவன் தெரிந்து கொள்ள முடியவில்லை.

"பௌத்தன் மேல் ஆணை, எழுந்திருங்கள்!” என்று அந்த ஆள் கூவினான்; இன்னும் அவசரமான குரலோடு “தயை செய்து எழுந்திருங்கள்! நீங்கள் பல்வகை ஆபத்துக்களாற் சூழப்பட்டிருக் கிறீர்கள்!” என்று கூவினான்.

நீலலோசனன் மூளையில் உண்டான குழப்பத்திற்கும் திகைப்பிற்கும் நடுவிலே, ஏதோ இன்னதென்று அறியப்படாத ஆபத்து வரப் போகிறதென்னும் ஓர் உணர்ச்சி மாத்திரம் மெதுவாகத் தோன்றிற்று; ஆகவே, பெரும்பிரயாசையோடு தன்னையே தான் எழுப்பிக் கொண்டான்.

66

என்ன! என் நன்றியுள்ள கேசரி வீரன் நீதானோ?” என்று கடைசியாகத் தன் மூத்த துணைவனைத் தெரிந்து கொண்டவன் போல வினவினான்.

66

'ஆ! இதோ தண்ணீர்” என்று கேசரி வீரன் சொல்லிக் கொண்டே கிட்ட இருந்த ஒரு மேசையண்டை விரைந்து போய் ஒருகைக் குட்டையைத் தண்ணீரில் தோய்த்துக் கொண்டு வந்து தன் வாலிப எசமானின் கொதிக்கும் நெற்றிமேல் கட்டினான்.

அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் தெளிவான தண்ணீரை நிரப்பி,அதனை நீலலோசனன் பருகும்படி வாயிற் கொடுத்தான் கேசரிவீரன் எதிர்பார்த்ததற்கு மேலாகவே அதனைப் பருகின தனால் விளைந்த நன்மைகள் மிகவிரைவில் வலிவு பெற்றுத் தோன்றின; சில நிமிஷங்களில் நீலலோசனன் தன் முழு உணர்வுந் தனக்கு வரப்பெற்றான். அவன் சுற்றிலும் நோக்கினான்; விருந்தூட்டு நடந்த அறையில் இப்போது தானிருப்பது ஒரு படுக்கையறை என்றும் தெரிந்து கொண்டான்.

66

.

ன்னும் பொழுதிருக்கும் போதே நாம் இவ்விடத்தை விட்டு விரைந்து புறப்படுவோம், ஏனெனில், எம்பெருமானே, நாம் ஆபத்துக்களாற் சூழப்பட்டிருக்கின்றோம் என்பதனை யான் திரும்பவும் சொல்லுகின்றேன்” என்று கேசரி வீரன் கூறினான்.

66

ஆ! உண்மையில் இங்கே இரண்டகம் நடந்திருக் கின்றதா?” என்று சடுதியிற்கூறி, விருந்தாட்டு மேசையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/91&oldid=1581346" இலிருந்து மீள்விக்கப்பட்டது