உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

61

ஒளி உடையவாய்த் தோன்றின; அவன் தான் மாய வித்தை களாற் சூழப்பட்டிருப்பது போல உணர்ந்தான்; உடனே அவன் தன் கையை நீட்டி அவள் தந்த கிண்ணத்தை வாங்கிக் கொண்டான். அப்படி வாங்கின அதே நொடியில் தாமிருக்கும் அறைக்கதவு திடீரெனத் திறந்தது: உடனே மீனாம்பாள் சில அடிகள் பின் வைத்துக்குதித்தாள்--நீலலோசனன் தான் இன்னுங்குடியாத அக்கிண்ணத்தை மேசையின் மேல் வைத்தான்--விசுவாசமுள்ள வனான கேசரிவீரன் அவன் எதிரே வந்தான்.

அந்தப் பௌத்த

ளைஞன் உடனே தன்னிருக்கையில் நின்றும் எழுந்தான்--இங்ஙனம் தான் எழுந்தது என்ன எண்ணத் தினாலென்பதைத் தானே அறிந்திலன்--நடுவில் இவ்வாறு வந்ததற்காகத் தன் ஏவற்காரனைக் கடிந்து கொள்கிறதா அல்லது தன்னை அபாயத்தில் உட்படுத்துவதாகத் தன் அறிவுக்குத் தென்பட்டு வருகின்ற இம்மாய வித்தை யினின்றும் தன்னை மீட்கவந்த அவனது வருகையை நல்லது என்று எற்றுக் காள்ளுகிறதா இன்னதென்று அவனுக்கு ஒன்றும் தெரிய வில்லை. அவன் எழுந்து எதிரே தள்ளாடினான்; கேசரி வீரன் தன்றோள்களில் அணைத்துக் கொள்ளாதிருந்தால் அவன் கீழே வீழ்ந்திருப்பான். நீலலோசனன் தன் உணர்வை இழந்தான்; சுற்றிலும் உள்ள பொருள்கள் எல்லாம் அவனுக்கு வெறுஞ் சூனியமாய்த் தோன்றின--திரும்பவும் அவனுக்கு அறிவு தோன்றி ஏதோ ஒரு புதிய சம்பவம் நடப்பதாக அறிவிக்கும் வரையில் அவனுக்கு அவையெல்லாம் வெறும் பாழாய்க் கிடந்தன.

அவன் ஒரு கட்டிலின் மேற் படுத்துக் கிடந்தான்; அவனிருந்த அறையில் ஒரு விளக்கு மினுக்கு மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது; மேலும், அவன்மேற் குனிந்து கொண்டிருந்த ஒரு மனிதன் சாயையால் அஃது இன்னும் இருளோவென்றிருந்தது. இந்த ஆள் தன் கையை நீலலோசனன் தோள் மீது வைத்து அவனை எழுப்புவதற்காக அவசரமான குரலோடு அன்புள்ள பெருமானே எழுந்திருங்கள்! பெருமானே நீங்கள் எழுந்திரும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகின்றேன்!” என்று சொல்லி அவற்றை மெதுவாக அசைத்தான்.

நீலலோசனனும் கட்டிலினின்று எழுந்திருப்பதற்கு முயன்றான்: ஆனால் தன் தலை ஈயக்கட்டிபோற் கனமாயிருத் தலை உணர்ந்தான்: திரும்பவும் தலையணைமேற் சாய்த்து, அட பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/90&oldid=1581345" இலிருந்து மீள்விக்கப்பட்டது