உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் – 13

உடையனானான்; ஏனென்றால் “என் அன்புள்ள காதலனே, உமது சொல்லுறுதிக்கு ஈடாக இன்னும் ஒரு கிண்ணம் திராட்சப் பழரசம் அருந்தும், அருந்தும்." என்று அவள் உரத்துக் கூவியதை அவன் தெளிவாக நினைவு கூர்ந்தான்.

66

அதன் பிறகு அவள் மேசையைச் சுற்றிப் போனாள்; திரும்பவும் அவன் கிட்ட வந்தாள்--அதன் பின் அவனது கிண்ணத்தில் திராட்சப் பழரசத்தை நிரப்பினாள்; அப்பால் கீழே குனிந்து அவன் தொடைப் புறத்தில் தொங்கவிட்டிருந்த கத்தியைத் தொட்டு, இதோ உமது பக்கத்திலிருக்கும் இந்தக் கொடுவாளானது, நீர் சண்டை முகத்தில் வெற்றி பெறும்படி கடவுளை வேண்டுபவளும், நீர் வெற்றி பெற்றுப் பெருஞ் சிறப்போடு மீண்டுவருங்கால் நும்மை தன் வீட்டிலே இறுமாப் போடு எதிர் சென்று அழைப்பவளுமான நும் காதலியின் பொருட்டு உறையினின்றும் கழிக்கப்படுவதாக, பெருந்தகைமை யுள்ள நீலலோசன! நீர் அணிந்திருக்கும் இந்தப் போர்ப் படையை என்னுடைய வாய்முத்தங்களாற் பரிசுத்தப் படுத்து கின்றேன். என்று சொல்லிக் கொண்டே காதல் நிறைந்த தன் கண்களால் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

இங்ஙனம் பேசிக்கொண்டே மீனாம்பாள் இளைஞனான நீலலோசனன் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கொடு வாள் மேல் தன் அழகிய தலை குனிந்தாள்; அதனைத் தன் மார்பில் அணைத்துக் கொண்டு தான் ஒரு சிறு பெண் போலவும் அதுதான் விளையாடுங் கருவிபோலவும் சில நிமிஷ நேரம் அதனோடு விளையாடுவது போற் காணப் பட்டாள். அதன்பின் சடுதியிலே எழுந்து நின்று “இப்போது, என் நீலலோசன, இக் கிண்ணத்திலுள்ள இரசத்தைப் பருகுவதால் நுமது சொல்லை உறுதிப்படுத்தும்." என்று உரத்துக் கூவினாள்.

இளைஞனான அப்பௌத்தன் தன் அறிவு தன் வசத்தில் இல்லாதவனாயினான்: மதிமயக்கும் பல்வகை மந்திர வசியத்தில் அகப்பட்டவனானான்; அவன் தலையிலும் நெஞ்சிலும் மயக்கம் ஏறியது; ஓர் இராக்கதன் கையில் அகப் பட்ட பிள்ளையானது எப்படி வலிவிழந்து கிடக்குமோ, அப்படியே அவன் முழுவதும் அந்த நங்கையின் வசத்திற் கிடந்தான். அவள் குரலொலி அவன் காதுகளுக்குச் சங்கீத ஓசை போன்றிருந்தது; அவள் கண்கள் தன் கண்களை நோக்கியபோது அவை இயற்கையில்லாத மருட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/89&oldid=1581344" இலிருந்து மீள்விக்கப்பட்டது