உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

59

அறிவு குழம்பியது; தன் வாழ்நாளில் இம்முதல்முறை தான், தானே பொருளறியக் கூடாமற் பேசும் தன் சொற் கூட்டத்திற் கிடந்து தடுமாறினான்; இவ்வாறு நிகழ்ந்ததை விட்டு வேறு போக்கிடம் ல்லாமையால், கடை சியாக நடந்தது நடக்கட்டுமென்று ஒருவகையாய்த் துணிவு கொண்டிருந்தான். அவன் மூளையில் மயக்கமேறியது; பொன்னிறமான மூடுபனி தன்னை வந்து கவிவது போற்றோன்றியது; ஆயினும் மேசையின் எதிர்ப்பக்கத்தே யிருந்த மீனாம்பாளின் ஒளி மிகுந்த கண்கள் காதல் நிரம்பினவாய்த் தன்னை அதன் ஊடு உற்று நோக்குவதைப் பார்த்தான்.தான் விருந்தேற்று உபசரிக்கும் நிலையிலுள்ள தனால் அவ்வுபசாரங்கள் முற்றுஞ் செய்வாள் போல, அங்கே பலகை மேற் செவ்வையாகப் பரப்பி வைத்த பொறுக்கான செழுந் தின்பண்டங்கள் அத்தளையும் அவன் உண்ணும்படி அவள் வற்புறுத்தினாள்; கடைசியாக அங்கு இருந்த காட்டுத் தேனையும் மிகுதியாகக் குடிக்கும்படி தானே அதனை அவனுக்கு எடுத்துக் கொடுத்தாள். இதற்கு முன் நீலலோசனன் இதனைச் சுவைத்துப் பார்த்ததே இல்லை. அது நாவுக்கு மிகவும் சுவையுடைத் தாயிருந்ததனாலும், அவ்வீட்டு எசமானனுக்கு

மாறாக விருந்தேற்று உபசரிக்கும் நிலையிலுள்ள அழகிய நங்கையின் கட்டாயத்தை மறுத்திடாமல் அதற்கு இணங்க வேண்டியிருந்த தனாலும் அவன் இக்காட்டு தேனைப் பருகினான்; தனக்கு முன் மூடுபனிபோற் றோன்றிய மயங்கிய தோற்றமானது வரவர அவனை மிகுதியாகச் சூழுவது போற் காணப்பட்டது-- அதன்ஊடே அம்மங்கையின் விழிகள் அவனை உற்றுப் பார்த்த போது, அவை மிகுதியும் விளக்கமுற்று வந்தன--அவன் அவளைப் பார்க்கப் பார்க்க அவள் சொல்லுக்கடங்காத அழகு உடைய வளாய்த் தோன்றினாள்; அவள் தன் இனிமை வாய்ந்த குரலோடும் “நீலலோசன, நீரே என் மனத்தாற் பாவிக்கப்பட்ட விழுப்பொருள்--நான் உம்மைக் காதலிக் கின்றேன்” என்று திடீரெனக் சொல்லியபோது, அவனை ஒருவகையான மயக்கம் வந்து பற்றியது.

அதற்குத் தான் ஏதுமறுமொழி சொன்னானென்பதை அவன் அறிந்திலன்: இதற்குப் பின்னும் அவன் அதனை நினைவுக்கு கொண்டு வரக்கூடவில்லை--ஆயினும் மீனாம்பாள் நோக்கத்திற்கும் விருப்பத்திற்கும் இசைந்ததாகத் தான் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும் என்னும் கலங்கிய மங்கலுணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/88&oldid=1581343" இலிருந்து மீள்விக்கப்பட்டது