உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் 13

வந்து வைக்கப்பட்டது.பலவகையான பாகமாய்ச் சமைத்த மான் இறைச்சியும். சிறந்த காட்டுக் கோழிக்கறியும், மிகச் சுவைப்பதான தாராக்கறியும், மீனும் வேட்டையாடிக் கொணர்ந்தவற்றின் இறைச்சியும் அங்கே தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. இனிய தின்பண்டங்களும் வைக்கப்பட்டிருந்தன. பருகுவதற்குப் பானகங்களும் கொடி முந்திரி பழ இரசமும் இருந்தன. மேசையின் நடுவிலே காட்டுத் தேன் நிரப்பிய பீங்கான் தட்டு ஒன்று இருந்தது. மீனாம்பாள் உள்ளக்களிப்போடும் மரியாதை யோடும் விருந்து பரிமாறுதற்குத் தலைப்பட்டாள்; தானே மிக்க உபசாரத்தோடும் வசீகரத்தன்மையோடும் உபசரித்தற்கு முயன்றாள். இவள் இப்போது பேசிய சாதுரிய மதுர மொழிகளாலும் காட்டிய மாயங்களாலும், இவளுடைய சில முரட்டுத்தன தைரிய சுபாவத்தைப் பற்றி முன் தான் கொண்ட நினைவையும் நீலலோசனன் மறந்து போனான். தான் மயக்கந் தருவதில்லாப் பானகங்களையே அருந்துவது வழக்கமாயிருந் தாலும், அன்று வழிவந்த களைப்பினைப் போக்குவதற்கு மது அருந்துதல் அவசியமாயிருக்கின்றதெனப் புன்சிரிப்போடு சொல்லிக் கொண்டே தன் கிண்ணத்தில் அதனை நிரப்பினாள்; மேலும், தன் நண்பரான அவ்வீட்டின் தலைவர் இல்லாத சமயத்தில் தானே அவனுக்கு விருந்து உபசரிப்பாளாய் நேர்ந்தமையால் விருந்தூட்டலின் பொருட்டுத் தானே அவனுக்கு அதனை முன் செய்து காட்டல் வேண்டும் என்றும் சொல்லி, முத்துப் போன்ற தன் அழகிய பற்கள் குற்றமற்று விளங்க நகைத்தாள். இவ்வளவு உள்ளக்களிப்போடும் விருந்து உண்ண உபசரித்ததை மறுத்தால் அது தன்பால் மரியாதை யீனமும் அநாகரிக ஒழுக்கமுகமாய்க் காணப்படும்என்று நீலலோசனன் உணர்ந்தான்; உடனே அவள் சொற்படியே தன் கிண்ணத்தையும் எடுத்து மதுவை நிரப்பினான். பிறகு, அக்கிண்ணத்திலுள்ள அதனைப் பருகினான்; பருகியவுடன் அவன் மிகவுங்களிப்போடு சிரிக்கத் தொடங்கினான்--

அவனது பேச்சு மிக்க சுறுசுறுப்படையதாயிற்று; தானே மீனாம்பாளுக்கு உபசார மொழிகள் புகலக் கணடான்--அவன் தன்னைத் தடுக்க முயன்றான்; ஏனென்றால், அவள் தன் உள்ளத்தைச் சிறிதா யினும் வசப்படுத்தற்கு உரிய சுபாவம் உடையவளாய் இல்லாத தனால், தான் இங்ஙனம் நடப்பது மடமையும் பிழையுமாகு மென்று உணர்ந்தான். ஆனால், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/87&oldid=1581342" இலிருந்து மீள்விக்கப்பட்டது