உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

57

என்றும், அவன் விருந்தினரை உபசரிக்கும் குண முடையவனா கையால் நமது வருகையை உவந்து ஏற்றுக் கொள்வான் என்றும் மீனாம்பாள் நீலலோசனனுக்குத் தெரிவித்தாள். ஆயினும், ஒரு சாளரத்தில் ஒரு விளக்கு மாத்திரந்தான் எரிந்து கொண்டிருந்தது; அதனால் அங்கே விசேஷமான உண்டாட்டு இருந்ததாகப் புலப்படவில்லை. தானும் அம்மங்கையும் தம்முடன் வந்தோரும் அக்கோபுரத் தண்டையிற் போனபோது நீலலோசனன் இதைக் குறித்துப் பேசினான்; அதன் மேல் மீனாம்பாள் தன் நேசரான முதியோர் அங்கேயில்லாமல் வெளியே போயிருக்கலா மென்றும், அவர் இல்லாதது பற்றி வீட்டிலுள்ளவர்கள் நம்மை விருந்தேற்று உபசரிப்பதற்குச் சிறிதும் தடையுண்டாக மாட்டா தென்றும் நீலலோசனனுக்குக் கூறினாள்.

П

அழகிற் சிறந்த அந்நங்கை முன்னறிந்து சொல்லியபடியே வான்றும் செவ்வையாக நடந்தன. அக்கோபுரத் தண்டை யிற் சென்றவுடனே, நன்றாக உடை தரித்துப் பார்வைக்கு நல்லனாய்த் தோன்றிய ஓர் ஏவற்காரனாற் கதவு திறக்கப் பட்டது; அவன் மீனாம்பாளைத் தெரிந்து கொண்ட வுடனே மிக்க மரியாதையோடு அவளை வணங்கி வாழ்த்தி னான்; பின் அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மறுமொழி சொல்வா னாகித், தன் எசமானன் வெளியே போயிருக்கிறார் என்றும், என்றாலும் அவளும் அவள் தோழரும் கூட வந்தோருங் கூடியவரையில் உபசரிக்கப்படுவர் என்றும் புகன்றான்.

அதன் பின் அவர்கள் கோபுரத்தினுள்ளே புகுந்தார்கள்; முற்றத்தின் நடுவிலே ஒரு குதிரைக்காரன் குதிரைகளை யெல்லாம் நிறுத்திக் கொண்டான்; பார்வைக்கு நல்ல தோற்றமுடையனாய் வந்த ஏவற்காரன் அவனுக்குக் கூடவிருந்து உதவி செய்தமையால் அவ்விடத்திற்கு இரண்டு ஆண் மக்களே இருந்தாரென்பது தோன்றிற்று என்றாலும், விருந்தினரை உபசரிக்கிறதற்கு அங்கே வேறு இரண்டு பெண் மக்களும் இருந்தார்கள். மீனாம்பாளும் நீலலோசனனும் வசதியான ஓர் அறைக்கு அழைத்துச் கொள்ளப்பட்டார்கள்; மற்றும் கேசரி வீரனும் வியாக்கி ர வீரனும் அம்மங்கையின் பணிப்பெண்கள் இருவரும் வேறோர் அறைக்கு அழைத்துக் கொள்ளப் பட்டார்கள்.

அந்த பௌத்த இளைஞனும் மீனாம்பாளும் புகுந்த அறையிலே மிகவுஞ் சிறந்த உணவு அதி சீக்கிரத்திற் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/86&oldid=1581341" இலிருந்து மீள்விக்கப்பட்டது