உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் 13

வேறு எந்த ஆன்மாவுக்கும் சொல்லாதே! மௌனமாயிரு-நல்ல பானகத்தில் நீ விரும்பியது எதுவாயினும் ஒரு சாடி வாங்கி வருதற்கு இதோ காசு இருக்கிறது எடுத்துக் கொள்.” என்று கூறினான் என்பது மாத்திரம் இங்கே சொல்லுதல் போதும்.

குதிரைக்காரன், கேசரி வீரன் அவ்வளவு தாராளமாய்த் தன் கையில் வைத்த பணத்தை எடுத்துக் கொண்டான்; பிறகு, குதிரைகள் தீனியூட்டப்பட்ட மிச்சம் ஒரு நாழிகை வரையிலும், லளகிகமறிந்த கேசரிவீரன் அக்கிழவன் பக்கத்திலேயே யிருந்தான். திரும்பவும் குதிரைகள் பயணத்திற்குச் சித்தமான வுடனே நம்முடைய பிரயாணிகள் அவற்றின் சேணத்தின் மேலெறிப் புறப்பட்டார்கள். இப்படி இவர்கள் முன்னே செல்லுகையில் கேசரிவீரன் இரகசியப் பொருள் அடங்கியதான ஒரு பார்வையைக் குதிரைக்காரக் கிழவன் மேற் செலுத்தினான்.

இங்ஙனம் வழி நடந்து போகையில், கேசரிவீரன் தன் வாலிப எசமானனிடம் அந்தரங்கமாகப் பேசப் பலகால் முயன்றும், அவனது முயற்சி பயன்படவில்லை. மற்றையோர் கவனியாதபடி இவன் அவனிடம் பேசக்கூடவில்லை, ஏனென் றால், நீலலோசனன் மீனாம்பாளிடம் இன்னும் உபசாரம் காட்டிக் கொண்டு கூடவே சென்றான். இப்போது இவனே முழுமையும் பேசிக் கொண்டு சென்றான்--அக் குடிசையண்டை வருதற்குமுன் அவன் புகுவித்துப் பேசிய விஷயத்தையே திரும்பவும் பேசா திருக்கும் பொருட்டு அவன் பலவகைப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே போயினான். அவ்விரவு தாம் தங்க வேண்டிய கோபுரத்திற்குச் செல்லும் சிறியவழி இவ்வாறு தொலைந்தது.

2 னி அந்தக் கோபுரமோ நாற்சதுரமாகக் கல்லினாற் கட்டப்பட்டிருந்தது; அதன்கட் சிறியசாளரங்கள் அமைக்கப் பட்டிருந்தாலும் அது மங்கலாய் ஓவென்று தோன்றியது, ஆயினும், அதன் தோற்றம் அதிசயமாகவேனும் பொல்லாங்கு டையதாகவேனும் காணப்படவில்லை; நாட்டுப்புறங்களில் வசிக்கும் மலைநாட்டுக் கள்வர் தலைவர்களும், குடியானவர் களும் இருக்கும் சாதாரண இருப்பிடத்தையே ஒத்திருந்தது. இந்தக் கோபுரத்திற்கு உடையவன் நிலங்கள் வைத்திருக்கும் ஒரு செல்வவான் என்றும்; இறந்து போன தன் றந்தைக்கு நேசன் என்றும், அவனுக்குப் பிள்ளையுமில்லை மனைவியும் இறந்தனள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/85&oldid=1581340" இலிருந்து மீள்விக்கப்பட்டது