உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

அதிகாரம் - 4 கோபுரம்

சீக்கிரத்தில் அந்தச் சிறிய குடிசையண்டை எல்லாரும் போய்ச் சேர்ந்தார்கள்; அவ்விடத்தில் கிடைக்கக் கூடியதான ஒரே ஒரு விடுதியில் பயணக்காரரான இவர்கள் எல்லாரும் தங்கினார்கள். அவர்கள் குதிரைகளை விட்டுக் கீழே இறங்கின வுடன் வியாக்கிரவீரன் தன் எசமானன் பின்னே அவ்விடுதியினுள் நுழைந்தான். அவ்வாறே அப்பணிப் பெண்கள் இருவரும் தன் எசமானியின்பிற் சென்றார்கள். கேசரி வீரனோ குதிரைகளுக்குத் தீனி செவ்வையாக வைக்கப்படுகிறதா என்று பார்க்க வெளியிலேயே தங்கியிருந்தான். ஏனென்றால் அவ்விடுதியில் இந்த ஆறு குதிரைகளுக்குத் தீனி தர ஓராளுக்கு மேல் இல்லை.

அவ்விடுதியிலிருந்த அக்குதிரைக்காரன் நுண்ணிய பார்வையும், தந்திரமான முகமும், சுருங்கின தோலுமுடைய கிழவனாயிருந்தாலும் தன் உணர்ச்சி குறையாதவனாயும் தன்றொழிலுக்குரிய எல்லாவற்றையும் செய்வதற்குப் போது மான அளவு உடம்பிற் சுறுசுறுப்பு உடையவனாயும் இருந்தான். அவன் தன் கையில் ஒரு தீப்பந்தம் பிடித்துக் கொண்டு சென்றான். குதிரை நோட்டத்தில் தேர்ந்தவன் போலவும், குதிரைகளில் மிகவும் நேர்த்தியான தொன்றைப் பார்க்க விரும்பினவன் போலவும் அவன் முதலில் அந்த ஆறுகுதிரை களையும் உற்றுப் பிடித்துப் பார்த்தான். அவற்றில் ஒரு குதிரையைப் பரிசோதித்துப் பார்க்கையில் அவன் வாயினின்றும் திடீரென ஓர் அதிசயச் சொற் பிறந்தது, கேசரிவீரன் அவ்வதிசயச் சொல்லைக் கவனித்ததும் குதிரைக் காரனைச் சில கேள்விகள் கேட்டான். அவர்களின் சம்பாஷணை இன்ன தென்று நாம் இங்கே சொல்லல் வேண்டாம்: அந்தச் சம்பாஷணை முடிவில் கேசரி வீரன் “இவ்விஷயங்களை என் அரிய நண்பனே, உயிரோடிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/84&oldid=1581339" இலிருந்து மீள்விக்கப்பட்டது