உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் - 13

கோபத்தோடும் நல்லான் சொல்லி முடிப்பதற்குள்; இருளன் சிறிது கோபத்தோடும் பதறித் “தலைவனே யான் சொல்வதைக் கேளுங்கள்! என் ஆட்களிற்சிலர் துப்பாக்கி களை எடுத்துச் சுட்டார்கள்: ஆனால், அது கொஞ்சம் பிந்திப் போயிற்று. அவர்கள் மிகவுங் கொடுமையாய் காயப் படுத்தப் பட்டுப் புறப்பட்டு ஓடிப்போகும்படி கட்டாயப்படுத்தப் பட்டார்கள். சண்டை நடந்த இடத்திற்குமிக்க தூரம் அல்லாத நிலவறை யொன்றிலே அவர்கள் கிடக்கிறார்கள்- அவ்விடத் திற்கு உதவிக்காகச் சிலரை யனுப்பி யிருக்கின்றே னென்பது தாங்கள் முன்னம் அறிந்ததே. என்னைப் பற்றியோ வென்றால் இதற்கு முன் என் அனுபவத்திற் கண்டறியாதவிதமாய் நடந்த அச் சண்டை யில் எனக்குக்கஷ்டமாக முடிந்ததென்பதைத் தெரிவித்துக் கொள்ளுவதற்கு யான் தாமதிக்கவில்லை. மிக்க பிரயாசத்தோடு யான் தப்பிப்பிழைத்தேன். ஆனாலும் போது மான தூரத்திலிருந்து கொண்டு என் துப்பாக்கியினாற் சுட்டு அவ்விளைய நீலலோசனனைப் பிடித்துக் கொண்டாவது வரக்கூடுமென்று யான் எண்ணியும் அதிலும் யான் தவறிப் போனேன். தகுதியுடையீர்! தங்களின்கீழ் யான் படைத்தலைவ னாயிருக்கக் கிடைத்த நாள் முதல் இம்முறைதான் அபசெய மடை யலானேன். இதற்காகத் தாங்கள் போதுமான அளவுக்கு என்மேல் நிந்தைமொழிகளை நிரப்பி விட்டீர்கள்” என்று கூறினான்.

6

நல்லான் ஆழச்சிந்தித்துப் பார்த்து ஏதும் மறுமொழி சொல்லாதிருந்தான்.

6

மறுபடியும் இருளன் “புகழ்நிறைந்த தலைவனே! யான் இந்தத் தோல்வியினால் வந்த தாழ்வுகளை அனுபவிப்பதற்கு ஆளாகி விட்டேன் என்பதையும், அவனைப்பற்றி உங்கள் உத்தேசம் எதுவாயிருந்தாலும் நீங்கள் நீலலோசனனைச் செவ்வையாய்ப் பார்த்து விட்ட பிறகு அவன் என்னோடு படுசண்டை செய்யும்படி தூண்டத்தக்க சமயத்தை விரைந்து எதிர்பார்த் திருக்கின்றேன் என்பதையும் உணர்ந்து மனம் ஆறுதல் அடையுங்கள். ஏனென்றால், எனது பெயருக்கு வந்த களங்கத்தை அவ்விளம் பௌத்தனுடைய இரத்தத்தாற் கழுவினாலன்றித் திரும்பவும் யான் ஒரு துணிந்த கள்வனென்று தலையெடுக்க மாட்டேன். பெருமானே! கடைசியாகத் தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/105&oldid=1581360" இலிருந்து மீள்விக்கப்பட்டது