உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி *

77

ஏற்பாட்டின்படி நடப்பதற்கு ஏதும் தீங்கு உண்டாகவில்லை; ஏனெனில் இந்நேரம் அளைய ளய நீலலோசனன்

பிரித்து

அனுப்பபட்ட நம் ஆட்களின் கையிற் சிறையாய் அகப்பட்டிருப் பான் என்பதில் ஐயமில்லை.” என்று சொன்னான்.

66

என்றாலும், இதிலுங்கூட எனக்கு ஐயுறவாகத்தான் இருக்கின்றது: ஏனென்றால் நீ எண்ணுகிறபடியுஞ் சொல்லுகிற படியும் நடந்திருந்தால், அச்செய்தி சில நாழிகைகட்கு முன்னேயே நம்மிடம் எட்டாதது ஏன்? மீனாம்பாள் பெருமாட்டி அனுகூலமான செய்தியைத் தெரிவிப்பதில் காலந்தாழ்ப்பவள் அல்லளே.." என்று நல்லான் இணைந்து பேசினான்.

“அச்செய்தியைத் தெரிவிப்பதில் காலந்தாழ்ந்தமைக்குத் தக்க காரணம் இப்போதே தெரியவரும் என்பதற்குச் சந்தேக மில்லை; ஏனெனில், நம் உபாயம் முழுதும் மிகவுந் திருத்தமாக ஒழுங்கு செய்யப்பட்டமையால் அது தவறு மென்பது கூடாத காரியம்.” என இருளன் மறுமொழி பகர்ந்தான்.

66

ஆ! நாம் சுழற் றுப்பாக்கியினையும் வாளினையும் கீழ் எறிந்து விட்டுத் தந்திரவகைகளிலும் நுண்ணிய உபாயங் களிலும் நுழைந்ததே, நாம் நமக்குரிய இயற்கையைக் கடந்த தாகும் என்று நினைக்கின்றேன். இப்படிப்பட்ட சண்டை யிடுவதில் எனக்குச் சிறிதும் திறமை இல்லை." என்று நல்லான் திடுமென மொழிந்தான்.

66

என்றாலும், தலைவனே நம்முடைய உபாயவகைகள் மிகவும் நன்றாக யோசனை செய்து அமைக்கப்பட்டன வேயாகும் என்பதைத் திரும்பவுஞ் சொல்லுகின்றேன். ஆனால் அவ்வுபாய வகைகளை யான் தங்களுக்கு முதலிற் சொல்லிய போது நீங்கள் அவற்றைப் பொறுமையோடு கேட்கவில்லை; ஆகவே. இப்போதும் அவற்றை நீங்கள் அறிந்து கொள்ளா விட்டால் அதற்காக நான் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.” என்று இருளன் உறுத்திச் சொன்னான்.

அதற்கு அத்தலைவன் ஏளனமாய் “அப்படியானால் நீ எங்ஙனம் இவ்வளவு உயர்ந்த ஏற்பாட்டைச் செய்தனை என்பதும், நீ அடைந்த தோல்வியை இஃது எவ்வாறு மாற்று மென்பதும் உன் வழக்கப்படியே விவரமாக எடுத்துச்சொல். ஒரு வேளை நீ சொல்லுவது எனக்கு நன்மைதருமென்று நம்புகின்றேன்-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/106&oldid=1581361" இலிருந்து மீள்விக்கப்பட்டது