உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் -13

என்றாலும் இச்சமயம் நீ சொல்லுவ தொன்றும் எனக்கு விருப்பமாய் இராது என்று ஒளியாமற் சொல்லு கிறேன். என்றான்.

66

அவ்விவரங்களை எடுத்துச் சொல்வதென்றால் நான் தோல்வி அடைந்தது முதற்கொண்டு சொல்லவேண்டும்,-- பெருமை மிக்க தலைவனே! இத்தோல்வியைப் பற்றித் தாங்கள் ஏதோ தயாளமின்றி அடிக்கடி குறிப்பிட்டுக் குத்திச் சொல்லு கின்றீர்களே.” என்று இருளன் எதிர்மொழி புகன்றான்.

தன் கீழவனான இவன் கொழுப்பேறிப் பேசுவதாக நல்லான் எண்ணமுற்று இருளன் மேல் இறுமாப்புடன் பார்த்த அதிகாரப் பார்வையின் கொடுமையை இங்கே எடுத்துச் சொல்லுவதென்றால் முடியாது.

.

உடனே அந்தப்படைத் தலைவன் தாழ்மை காட்டின வனாய்த் “தங்களுக்கு வருத்தம் உண்டு பண்ணினேனாயின் அதனை மன்னிக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். இப்போது அவ்விவரங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சண்டை முடிந்து போனதும், காயப்பட்ட என் ஆட்கள் இருவரோடும் ஓடிப்போனேன்; அவர்களை அக்குகையினுட் பத்திரமாகக் கிடத்தியபின், யான் பின்னும் விரைந்து செல்வதானேன். எனது குதிரையின் விரைந்த ஓட்டத்தைக் கொண்டு, யாரும் பின்றொடர்தற்கு ஆகாத அத்தனை தூரம் வந்து விட்டேனென்றும் எண்ணியறிந்தேன். அந்தப் பௌத்தர் கள் பின்றொடர முயன்றதாகவும் தெரியவில்லை: தாங்கள் அடைந்த வெற்றிமட்டில் அவர்கள் திருத்தி பெற்று நின்று விட்டது இயற்கைதான், தன் உறவினர்களைப் போய்ப்பார்த்துத் திரும்பி வரும்வழியில் இடையே தங்குவதற்காக மீனாம்பாள் பருமாட்டி கோபுரத்தை நோக்கிச் செல்லுவதாக முன்னமே எனக்குச் செய்தி எட்டியது. அஃதல்லாமலும், மீனாம்பாள் பெருமாட்டியின் ஒத்து உழைப்பின்றித் தாங்கள் எந்தக் காரியத்திலும் புகுவதில்லை என்பதும் பெருமானே! யான் அறிவேன், மீனாம்பாள் பெருமாட்டி வரும் வழியில் இளைய நீலலோசனனைப் போம்படி செய்விக்கத் தந்திரஞ் செய்ய வல்லேனாயின், நீலகிரிக்கு நேரே செல்லும் பாட்டையினின்றும் அவனைத் தவறுவித்து அவ்வம்மை அவனை மயக்கி அதற்கு நெடுந்தூரம் விலகியுள்ள கோபுரத்திற் கொண்டு போய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/107&oldid=1581362" இலிருந்து மீள்விக்கப்பட்டது