உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

79

சேர்த்து விடுவார்கள் என்றும், யான் தங்களிடம் திரும்பிச் சேர்ந்து தங்களிடம் உள்ள ஆட்களை அனுப்பி அப்பௌத்தர் தலைவனையும் அவனைச் சேர்ந்தோரையும் பிடித்துக் கொள்ளுவதற்கு வேண்டப்படும் சில நாழிகை வரையில் அவ்வம்மை அவனை அங்கேயே நிறுத்தி வைக்கக் கூடுமென்றும் எனக்குப்பட்டது.” என்று கூறினான்.

"நல்லது, இவ்வுபாயத்தை எண்ணி முடித்ததிற் சிறிதுந் தப்பு இல்லை; ஆனால், அதனைச் செய்து முடிப்பதோ--" என்று நல்லான் சொல்ல;

அதற்குள் இடைமறித்து இருளன் சொல்வானாயினான்: “புகழ் நிறைந்த தலைவனே! கேளுங்கள் மற்ற விவரங்களையும் முன் பின் அறியாத இடத்தில் வழிப்பயணம் போவோர் தாந்தாம் செல்லுதற்கு உரிய வழி யாது என அவசியம் வினாவுதற்கு இடமாக மூன்று பாட்டைகள் பிரியும் ஒரு சந்தியில் யான் குடியானவனைப் போல் உடையணிந்து போய் இருந்தேன். அங்கே யான் எண்ணியபடியே நேரலாயிற்று. மீனாம்பாள் பெருமாட்டி தன் பாங்கிமாரோடும் இளைப்பாறும் இடம் இதுவென முன்னமே உறுதியாகத் தெரிந்து கொண்டு, அங்கே போகும் ஒரு சந்துவழியில் அவர்களை அனுப்பினேன். மீனாம்பாள் பெருமாட்டியுடன் துரிதமாய் யான் கலந்து பேசிய போது அவ்வம்மை யான் குறித்துக் காட்டிய ஏற்பாட்டில் ஒருப்பட்டுநடக்க இசைந்தார் என்பதை யான் சொல்லவும் வேண்டுமோ?”

நல்லான் “அதைப் பற்றிச் சந்தேகம் இல்லை.” என்று உரத்துச் சொல்லி, “அதன் பிறகு, அப்பிரயாணிகளை அங்ஙனம் செம்மையாய் ஏமாற்றி..." என்று கேட்க.

இருளன், “உடனே யான் கோபுரத்திற்குக் கடுகெனச் சென்று நடக்க வேண்டுவன இவையென்று கற்பித்தேன்; பிறகு அங்கேயிருந்து ஒரே பாய்ச்சலாய்க் கிளம்பி, மறம் மிக்க என் தலைவனையும், ஆண்மை மிக்க எங்கள் ஆட்களில் அறுவரையும் இவ்விடங் காணலாமென்று வந்தேன்.” என்று விடைபகர்ந்தான்.

அதற்கு நல்லான், “எனக்குரிய வேலையாக யானே வரைந்து கொண்ட முதன்மையான காரியத்தை முடிக்கும் பொருட்டு நமது மலைக்கோட்டையினின்று இங்கே யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/108&oldid=1581363" இலிருந்து மீள்விக்கப்பட்டது