உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் 13

கூட்டிவந்த அவ்வாண்மையாளர் அறுவரையும், உன் சொற் படியே கோபுரத்தில் அவரைச் சிறைப்படுத்துதற்குத் துரிதமாக யான் அனுப்பி விடலானேன். அதோ உள்ள பாட்டை நெடுக நாகநாட்டரசி பயணம் வருவள் என்னுஞ்செய்தி இன்னும் ஒரு நொடிப்பொழுதில் எனக்கு வரலாம்; என் ஆண்மையாளர் தக்க நேரத்தில் திரும்பி வந்து சேராவிட்டால், அவனை யான் சிறைப்படுத்துவது எப்படிக்கூடும்?” என்று மறுமொழி கூறினான்.

66

அழகிற் சிறந்த நாகநாட்டரசி பெண்களை மாத்திரந் துணைக் கொண்டு பயணமாக வந்தால், புகழ்மிக்க தலைவனே! அவர்களைச் சிறைப்படுத்தி மலைக்குக் கொண்டுபோக நீங்களும் நானுமே போதும்." என்று இருளன் சொன்னான்.

66

"நாகநாட்டரசி குமுதவல்லி, இளைஞனான சந்திரன் சொல்லிய சொற்களைக் கேளாமல், ஏறக்குறைய வலிமையிற் சிறந்த ஆண்மக்கள் துணையாகப் பின்வரக் கொண்டு வந்தால் என் செய்வது?” என்று நல்லான் இணைந்து வினாவினான்.

66

தங்கள்

அதுகேட்டு ருளன் உண்மைதான்! ஏற்பாடுகளைப் பற்றித் தாங்கள் சிறிதேனும் எனக்குச் சொல்ல அருள் புரிந்தீர்களில்லை யாதலால், இதைப்பற்றி ஏதும் என் கருத்தைச் சொல்லவாவது நடக்க வேண்டிய முறை தெரிவிக்க வாவது கூடாதவனாய் இருக்கிறேன்.” என்று மரியாதையோடு

வினாவினான்.

அதுகேட்டு நல்லான் அகந்தை மிக்க பார்வையோடு“என் கீழ் ஏவலரிடமிருந்து அபிப்பிராயமாவது புத்திமதியாவது வேண்டுகில்லேன்; நான் கட்டளையிடுவேன்--அதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடக்கக்கடவர். என்றாலும்,” என்று பிறகு சிறிது அமைந்த குரலோடு “நீயும் உன் கூட்டத்தாரும் மேற்கரை யிலிருந்து நீலகிரிக்குப் போகும் நீலலோசனனையும் அவன் துணைவரையும் சிறைப்படுத்தும் வண்ணம் ஒரு பக்கம் அனுப்பப் பட்டபோது, யான் என் கூட்டத்தாரோடு நாகநாட்டிலிருந்து நீலகிரிக்குப் போகுங் குமுதவல்லியையும் அவளுடன் வருவோ ரையும் சிறைப்படுத்துவதற்கு இந்தப் பிரதேசத்தில் வந்து பதிவிருந்தேன் என்பதை அப்பொழுதே உனக்குச் சொல்லி யிருக்கின்றேன். இதற்குமேல் நன்றாகச் செய்யக்கூடிய ஏற்பாடு ன்றுமில்லை; அப்படியிருந்தும் அவ்வுபாயங்கள் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/109&oldid=1581364" இலிருந்து மீள்விக்கப்பட்டது