உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

81

குலைந்து போயின. இருளா உன் கூட்டத்தார் அழிந்து ஒழிந்த மையால், உன்னால் ஆகாது. தவறிய காரியத்தை முடிப்பித்தற்கு என்னவரைக் கோபுரத்திற்கு அனுப்பலானேன். என்று உரைத்தான்.

66

தலைவனே! நீலலோசனன் இந்நேரம் கோபுரத்திற் பத்திரமாகச் சிறை வைக்கப் பட்டிருப்பான் என்று நம்புவோமாக. ஆயின், நாக நாட்டரசியின் பொருட்டு யான் செய்யக்கூடியது ஒன்றுமில்லையா? அந்தப் பாட்டைக்கிட்டப் போய்ப் பதிவிருந்து பார்க்கட்டுமா?" என்று இருளன் கேட்டான்.

66

'அப்பாட்டையில் பதிவு இருத்திப்பாராது அவ்வளவுக்கு யான் முன் எச்சரிப்பு இன்றி இருப்பேன் என்று நீ எண்ணு நீ கிறாயா? ஆ! இதோ நான் பதிவுபார்க்க வைத்தவன் குதிரைமேல் வருகின்றான்.” என்று நல்லான் இடைமொழிந்து சொன்னான்.

இங்ஙனஞ் சொல்லிக்கொண்டே நல்லான் துள்ளி எழும்பினான்--அதுகண்டு உடனே இருளனும் அவ்வண்ணமே செய்தான்; பிறகு சில நிமிஷங்களுக்கெல்லாம் ஒருவன் மலையநாட்டார்க்குரிய உடுப்பு அணிந்தவனாய்த் தன் குதிரையை அவ்விடத்திற்கு விரைவாகச் செலுத்தி வந்தான்.

66

என்ன செய்தி கொண்டு வந்தாய் மாதவா?” என்று அக்கள்வர் தலைவன் ஆவலோடும் வினாவினான்.

66

ஒருவகையில் நல்ல செய்தியே." என்று குதிரையிலிருந்து கீழே குதித்திடும்போதே சொல்லிக் கொண்டு பின்னும் “மற்றொரு வகையில் திருத்தியில்லாததே” என்று அத்தூதுவன் கூறினான்.

66

று

‘அதனை விளக்கமாய்ச் சொல்.” என்று உடனே நல்லான் மொழிந்திட்டான்.

“பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தலைவனே! நீங்கள் எனக்குச் சொன்ன வருணனைப்படியே அழகிற்சிறந்த இளம் பெண் ஒருத்தி, இங்கிருந்து இரண்டரை நாழிகை தூரத்திலுள்ள அகன்ற பாதை நெடுக மிக விரைவாய்க் குதிரைமேற்போனாள்; அவளைப்போலவே குதிரைமேற்கொண்ட பெண்கள் இருவரும் அவள் பின்னே போயினர். சிறிதுநேரம் யான் அவர்களைப் பதிவிருந்து பார்த்தேன்: அந்தப் பாதை

வசீகரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/110&oldid=1581365" இலிருந்து மீள்விக்கப்பட்டது