உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் 13

யிலேயே போவதற்கு மாறாக, அவர்கள் சடுதியில் இடது பக்கமாய்த் திரும்பினார்கள்.” என்று மாதவன் தொடர்ந்து

சொன்னான்.

66

ஆ! தீமொழியே!” என்று நல்லான் உரத்துக் கூவி, “அந்தச் சிறிய ஊரைநோக்கிப் போவதற்கு மாறாக அவர்கள் நகரத்திற்குச் சென்று விடுதி கொள்வார்கள் போலிருக்கின் றதே! அச்சிறிய ஊரிலுள்ள சாவடியிற் போய்த் தங்குவார் களாயின் அவர்களைச் சிறைப்படுத்துவது திண்ணம்: நகரத்திலா னால் அவர்கள் பத்திரமாய் இருந்திடுவர்--அதுவல்லாமலும், அவர்கள் தங்கும் சத்திரத் தலைவனோ காசு பறிப்பதில் திறமை வாய்ந்தவ னாகையால் மறு நாட்காலையில் அவர்கள் புறப்படும் போது தக்க துணையோடு செல்லும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவான் என்பது என்பது திண்ணம். அவன் தன்னிடத்திற் பெருந்திரளாக உள்ள மக்களும் மருமக்கள்மார்களும் அவர் களுக்கு வழித்துணையாகச் சென்று பொற்காசு பெறல் வேண்டி நல்லானைப் பற்றிய நடுக்கமுள்ள கதைகளை மெல்லியல்புள்ள அவர்களுக்கு நிரம்பவும் எடுத்துச் சொல்வானே!” என்று வருத்தத்தோடும் பேசினான்.

யாது செய்வதென்று தெரியாமல் திகைப்புற்று அக்கள்வர் தலைவன் வருத்தமிக்க நிலையுடையான் போல் சில நிமிஷம் அங்கும் இங்குமாய் நடந்தான்.இப்படிப்பட்ட நிலைமையில் தாம் ஏதும் யுத்தி சொல்லக் கூடியவர்களாய் இருந்தாலும், இருளனும் மாதவனும் இவன் குணம் மாறுதலடைந்த இப்பொழுதில் வலிந்து ஒரு சொல்லேனும் சொல்லத் துணிவில்லாதவர்களாய் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.

"ஒவ்வொன்றுந் தவறுதலாய்ப் போகின்றது!” என்று நல்லான் தனக்குள் முணுமுணுத்தவனாய், “அவன் எனக்குச் சுருக்கமாய்ச் சொல்லிக் கொண்டுவந்த வேதனையான உபாயத்தின் கண் எனக்கு விருப்பமில்லாமையை யான் சந்திர னுக்குத் தெரியச் சொன்னது தக்க காரணங்கள் இல்லாமையான் அன்று. ஆ! எனக்கு ஒன்று தட்டுப்படுகின்றது. நல்லது! இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் அளவிறந்த பொருட்டிரளை அடைதற்கு அரிய திறவு கோலாயிருப்பதும் நாகநாட்டரசி எப்போதுந் தன்னிடத்திலேயே வைத்திருப்பதுமான இயந்திரத் தையாவது கைப்பற்றிக் கொள்ளுகிறேன்! அதன் பின், அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/111&oldid=1581366" இலிருந்து மீள்விக்கப்பட்டது