உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம்

13

அவ்வெடிப்பின் வழியே காட்டுவது போன்று இருந்தன. மோவாய் வேண்டுமளவுக்கு நீண்டு, அங்ஙனமே முகத்தின் முட்டை வடிவுக்கு நிறையப்பொருந்தி இளகி வட்டமுற்று இருந்தது; இவள் உறங்கும்பொழுதும் இவளது அழகிய முகத்தின் பொதுவான தோற்றமானது கள்ளமறியாத மிகவுந் தூய வசீகரத்தன்மையை ஒளிரக் காட்டியது.

இவள் தலையின் அழகில் எவ்வகையான குற்றமேனும் களங்கமேனும் இல்லை. எல்லாம் முழுத்திருத்தத்தோடும் வயங்கின; சிறியவாய் மெல்லென மடிந்த காதுகளுங்கூடக் கல்லிற் செதுக்கி யமைத்தாற்போலத் திருத்தம்பெற்றிருந்தன. கழுத் தானது மெருகிட்ட வெண்பழுப்புக் கற்போல் துலங்கியதே யல்லாமல், விளக்கமில்லாச் சலவைக்கல்லின் வெண்மை வாய்ந் ததாக இருக்கவில்லை; அதன் நிறம் உறைபனிபோல் தூயதாய் இருந்தாலும், பனியின்கண் உள்ள சீதளம் அதனிடத்தில்லை; அதனைப்பார்த்த கண்களுக்கு அது மெல்லென அனன்று காட்டியது. தொண்டைவரையில் சுற்றப்பட்டிருந்த மெல்லிய ஆடையானது தன்னுள் நாணத்தோடும், பொதிந்து வைத்த மார்பில் திரண்ட பொருளின் வடிவைத் தெரித்துக்காட்டியது. ஓர் அழகிய கையானது கட்டிலின் ஓரத்தின்மேற் றுவண்டு கிடந்தது.

இனி இப்படுக்கையின் தலைப்பக்கத்திலே மெத்தையிட்ட குறிச்சியில் ஓர் இளம் பெண் இருந்த வண்ணமாய் உறங்கினள்; மற்றொருத்தி அதன் கால்மாட்டில் அப்படியே மற்றொரு குறிச்சியில் உறங்கினாள். இவ்விளம் பெண்கள் இருவரும் தம் தலைவிக்கேற்ற அழகு வாய்ந்தவர்களாய் இருந்தமையால், கட்டிலின்மேற் றுயில் கொள்ளும் மிக மேம்பட்ட தெய்வ மொன்றைப் பாதுகாத்திருக்கும்படி இருந்த வேறிரண்டு சிறு கந்தருவப்பெண்கள் தூக்கத்தால் மயக்குண்டு கிடந்தனரோ என்று சொல்லும்படி தோன்றினர்.

நல்லான் அவ்வறையினுள் எட்டிப்பார்த்தபோது அவன் கண்ணெதிரே தோன்றிய காட்சி அத்தனை அழகு வாய்ந்ததா யிருந்தது. இதுதான் முதன் முதல் இவன் குமுதவல்லியைப் பார்த்தது; இவளுக்குக் குழுதவல்லியெனும் பெயர் மெய்யாகவே மிகவுந் தகுதியான தொன்று என்னும் எண்ணம் இவன் உள்ளத்தில் உடனே தோன்றியது. இவன் நெஞ்சமானது வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/117&oldid=1581372" இலிருந்து மீள்விக்கப்பட்டது