உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

87

தோன்று வதாயிற்று. மேலும் அவ்விளக்கின் ஒளியானது நாகநாட்டரசியின் அருமையான முகஅமைப்பை இனிது விளக்கியதோடு, வழுவறத் திருந்தியிருக்கும் அவளுருவின் அமைவையும் அவள் நிறத்தின்மெல்லிய இயலினையும்

தெளித்துக்காட்டியது. இவளுக்கு இப்போதுவயது ஏறக்குறைய பதினேழு; ஆனால், வடிவத்தின் திரண்ட வளர்ச்சியைப் பார்த்தால் வயது பத்தொன் பதென்று மதிப்பிடக்கூடிய தாயிருக்கும். கன்னங்கறேல் என்று பளப்பளப் பாயிருக்கும் இவளது செழுங்கூந்தலானது அழகிய தலைவைத்திருந்த அணையின்மேல் கற்றை கற்றையாய்த் துவண்டு மிளிர்ந்து கிடந்தது; இவள் புருவங்களோ பல படியாலும் மிகக்கறுத்துத் துகிலிகையால் மெல்லென எழுதப் பட்டனபோல் எழிலுடன் வளைந்து வழுவழுப்பான பொட்டுக்களின் மினுமினுவெனும் வெண்மை நிறத்தை விளக்கிக் காட்டின. மூடப்பட்டிருந்த கண் இதழ்கள் பரியனவா யிருந்தமையால் தம்மால் உள் மறைக்கப் பட்ட கோளங்களின் பருமனைத் தெரிவுறுத்தின; புருவங்களைக் காட்டினும் பின்னுங்கருமை யாயிருந்த இறைப்பைமயிர் விளிம்புகளானவை நாம் சார்ந் திருந்த கன்னங்களின் களங்கமற்ற தூயவெண்ணிறத்தோடு மாறுபட்டு விளங்கின. கடற்சிப்பியிற் பிறக்கும் முத்தின்கண் உள்ள பளபளப்போடு அழகிய தெளிவும் உடையதாயிருந்தமையால், அகத்திற்றோன்றும் உணர்வின் அசைவால் அழகியமுகத்தின்கண் வருவிக்கப்படும் சிவப்பினைத் தோன்றக்காட்டும் தூயமறுவற்ற இவளது தோளிலே துலங்கின நிறத்தைத் தாமரையின் மெல்லிய செந்நிறத்தோடு சேர்த்துக் குழைத்த வெள்ளல்லியின் ஒளிமிக்க வெண்மை நிறம் என்று மாத்திரம் வருணித்து உரைக்கலாம். இவளுடைய கன்னங்கள் இளம்பருவத்தின் புத்தப்புதுமைக்கும் சுகத்திற்கும் இணங்கப் போதுமான அளவு திரண்டு உருண்டு இருந்தனவே யல்லாமல், முகத்தின் முட்டை வடிவமான அழகைச் சிறிதும் பழுதுபடுத்த வில்லை. நெற்றியானது மட்டாகவே உயர்ந் திருந்தது. - மூக்கு மிகவும் நேராக அந் நெற்றியோடு பொருந்தி யிருந்தது. வாயோ உலகத்திற் பார்க்கப்பட்ட மிக இனிய பொருள்களுள் இனியதாய் இருந்தது! அஃது அகலமின்றி ஒடுங்கி மேல் இதழ் கீழ்இதழினும் மிகப்பருத்து இருந்தது; அவ்விதழ்கள் இரண்டும் சிறிது அகன்றபோது, மிகச்சிவந்த இனிய கொழும்பழம் ஒன்று வெடித்து உள்ளே அமைந்த தூயவெள்ளிய விதைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/116&oldid=1581371" இலிருந்து மீள்விக்கப்பட்டது