உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

அதிகாரம் - 6 நாகநாட்டரசி

முதன்முதல் நல்லான் அவ்வறையினுள்ளே நோக்கிய போது அவன் கண்களின்எதிரே தோன்றியகட்சியானது மிகவும் அழகிய தொன்றாய் இருந்தது. அந்தச் சத்திரத்திலுள்ள சிறந்த அறைவரிசைகளுள் இந்த அறை சேர்ந்ததா யிருந்தமையால் இதுவும் நேர்த்தியாகவே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மலைநாட்டு வழக்கப்படி அந்தப்படுக்கையானது தரைக்குமேல் ஏறக்குறைய ரண்டடி உயரம் உயர்த்தப்பட்டிருந்தது; கட்டிலோ அழகாகச் செதுக்கப்பட்ட இலேசான மரத்தாற் செய்யப் பட்டிருந்தது. அதன்மேல் விதானம் ஒன்று ஏற்றப் பட்டிருந்தது. அவ்விதானத்தினின்றும் நீலப்பட்டுத்திரை தொங்க விட்டிருந்தது. சூரியகாந்திப்பட்டினால் உறையிடப் பட்ட மெத்தையும் தலையணைகளும் மிகப்பருத்தவை களாயிருந்தன. அத்தகைய தான கட்டிலின்மேல் நமது கதாநாயகியான நாகநாட்டரசி பள்ளிகொண்டிருந்தனள்; இவளுக்கு வாய்த் திருந்த எங்கு மில்லாத பேர் அழகின் பொலிவால் இவளுக்கு குமுதவல்லி என்னும் பெயர் வழங்கி வரலாயிற்று.

இவள் நேர்த்தியான ஒற்றை யாடைமாத்திரம் மேலே அணிந்திருந்தாள்; ஏனெனில், நம் இந்தியநாட்டுப் பெண்கள் இராக்காலத்தில் ஆடையை முழுதுங் களைந்து விடுவதில்லை; பகற்காலத்தில் வழக்கத்துக்கு இணங்கித் திருத்தமாக உடுக்கும் உடைக்கு ஈடாக, இரவில் இலேசாகத் துவளும் தளர்ந்த ஆடை யைச் சுற்றிக்கொள்வர். அவ்வறையினுள் எரிந்து கொண்டிருந்த விளக்கானது, அக்கட்டிலின் மேற் சாய்ந்திருக்கும் அழகிய உருவின்மேல் தன் கொழுஞ்சுடரின் செழுங் கதிர்களைச் சொரிந்தது; மெல்லிய ஆடையாற் சுற்றப்பட்டிருந்த அவ்வழகிய உருவானது, திரைகளினின்று விழும் கரியநிழலின் அண்டை யிலே தன்மேல் வெளிச்சம் படுதலால் மிகவும் விளக்கமுடன்

ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/115&oldid=1581370" இலிருந்து மீள்விக்கப்பட்டது