உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

85

யாய் இருக்கக்கண்டான். உட்கதவில் காதை வைத்து உற்றுக் கேட்டான். அங்கே தூங்குகிறவர்கள் முறையாக மெதுவே தாழ்ந்துவிடும் மூச்சைத்தவிர மற்றெல்லாம் அமைதியாக இருந்தது. நல்லான் தனது முகமூடியை முகத்தின்மேல் ப்போது பொருத்திக்கொண்டு, உறையினின்றுங் குத்து வாளைக்கழித்து எடுத்துப்பிடித்தவனாய், மேற்கட்டி இட்ட தளிமத்தின்மேல் அழகியகுமுதவல்லியும் அப்படுக்கையின் பக்கத்தே சாய்வு அணைமேல் அவள் தோழிமார் இருவரும் உறங்கிக் கொண்டிருக்கும் அறையினுள் திருட்டுத் தனமாய் நுழைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/114&oldid=1581369" இலிருந்து மீள்விக்கப்பட்டது