உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் 13

இவ்வாறு, தான் காணவேண்டியவர்கள் அந்தச் சத்திரத்திலேயே இருக்கின்றார்கள் எனக் கள்வர் த கள்வர் தலைவன் வன் ஐயமின்றித் துணிந்தான்.

இவன் தனக்குத் தனிமையான ஓர் அறை வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொண்டான்; பிறகு தனக்கு இராச்சாப்பாடு காணர்ந்து வட்டித்த பரிசாரகன் வாயினின்றே, குமுத வல்லியையும் அவள் பாங்கிமாரையும் பற்றித் தான் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியிருந்த சில சிறு உண்மைகளை வரச் செய்தான். தனக்குச் சிறிதும் பற்றில்லாத விஷயங்களைக் குறித்துப் பேசுவான் போல், முன் நினைவின்றி வெறும் பேச்சாகப் பேசும் வகையில் வைத்து இவ்வளவும் சுளுவாகத் தெரிந்து கொண்டான். சாப்பாட்டு விடுதியில் உள்ளார்க்கு உரிய இயற்கைப்படியே அவ்வேவற்காரனும் மிகவும் பேச்சுக்காரனா யிருந்தான். இங்ஙனம் தான் தேடிப் போந்த பெருமாட்டி ஒருவாறு ஓளிவாய் வழிப்பயணம் போய்க் கொண்டிருக்கின் றாள் என்பதனைக் கள்வர் தலைவன் கண்டு கொண்டான்; ஆனால் அவ் ஏவற்காரன் குமுதவல்லியின் மேனிலைமையின் மெய்ம்மையைப் பற்றி ஐயுறவு கொண்டவன் அல்லாமையால், அவனுக்கு அப்பெருமாட்டி மறைவாய்ச் செல்லுகின்றா என்பது தெரியாது; ஆனால் நல்லானோ இவ்வரலாறு க ளயெல்லாஞ் சந்திரனிடம் சந்திரனிடம் தெரிந்து கொண்டான். முன்போலவே இவன், குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் அச்சத்திரத்திற் றங்கியிருக்கும் அறைகளின் உளவுகளைத் தெளிவாய்த் தெரிந்து கொண்டான்.

ஐந்து நாழிகை சென்றன: நடுஇரவு ஆகுஞ்சமய மாயிருந்தது; அச்சத்திரம் எங்கும் ஓசை அவிந்து அமைதியா யிருந்தது. இப்போது நல்லான் தான் பூண்டிருந்த மாதவன் உள்ளரைச்சட்டையின் கறுப்புக் கரையின் ஒருதுண்டைக் கிழித்தெடுத்தான்; அங்ஙனங் கிழித்த துண்டிற் கண்கள் பார்ப்பதற்கு இரண்டு தொளைகள் செய்து, பிறகு அதனை முகமறைப்பாக அணிந்துகொண்டு, தானிருந்த அறையை விட்டுத் திருட்டுத்தனமாய் புறப்பட்டான்.புறப்பட்டு நாகநாட்டரசியும் அவள்தோழிமாரும் இருக்கும் அறைவரிசைகளுக்குப் போகுஞ் சிறியநடையறையில் வந்து சேர்ந்தான். அங்கே ஒருவிளக்கு எரிந்து கொண்டிருந்தது: ஆனால் அக்கள்வர் தலைவன் அது வெறுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/113&oldid=1581368" இலிருந்து மீள்விக்கப்பட்டது