உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் - 13

இவள் தன் வயதிற்கும் பெண்டன்மைக்கும் ஏற்ப மெல்லியல்பு எல்லாம் உடையவளாயிருந்தும், சடுதியில் நிகழும் நிகழ்ச்சியிலேனும் கடுமையான இடர்ப்பாடு களிலேனும் தனது மனத்துணிவை இதற்கு முன் சோதனையாக எங்குங் காட்டிப் பார்த்தவள் அல்லள் - என்றாலும், இப்போது குமுதவல்லி ஒரு நிமிஷத்தில் தெய்வீகமான ஒரு மனத்துணிவினால் உந்தப் பட்டாள். முகத்தை மறைத்துக்கொண்டு கையில் வாட்படை பிடித்தவனாய் ஒருவன் தன் அறையினுள் திருட்டுத்தனமாய்ப் புகுந்திருக்கின்றான் என்பது மனத்திற்பட்ட அந்த நேரமே, அவள் திடீரென முற்றும் விழித்துக் கொண்டாள். ஆயினும் தன் கண்களை மூடியபடியே திறவாதிருந்தாள். அங்கே நடப்பதை அவள் உணர்ந்தாளென்று அறியும்படி அவள் திடுக்கிட்டு எழுந்திருக்கவும் இல்லை, அப்பக்கம் இப்பக்கம் அசையவும் இல்லை, அதனோடு, தான் மூச்சுவிட்டுக்கொண்டிருந்த முறையைக்கூட அவள் சிறிதாயினுந் தடைசெய்யவும் இல்லை, மாற்றவும் இல்லை.

மின்னல் தோன்றி மறைவதைப் போலப் பலவகைப்பட்ட எண்ணங்கள் மிகவிரைவாய் அவள் உள்ளத்தில் ஊடுருவிப்போ யின. கூக்குரலிட்டால் அந்தச் சத்திரத்தில் உள்ளவர்கள் அவளுதவிக்கு வரக்கூடுமாயினும், அவள் இருந்த அறைகள் சிறிது ஒதுப்புறமாய்த் தனித்து இருந்தமையால், அவள் எவ்வளவு கூவினாலும் அஃது அங்குள்ளவர் காதுகளுக்கு எட்டமாட்டாது: மற்றும், தன் இதழ்களிலிருந்து அங்ஙனம் ஓசை புறப்படும் அப்பொழுதே தன்னுயிர்க்கு இறுதியாய் முடியும் என்பதும் அவள் அறிந்தாள். ஆகவே, நான் தூங்குவது போற் பாசாங்கு பண்ணுதலே அவள் தப்பிப் பிழைப்பதற்கு வழி. முகமறைப் போடு வந்த அவன் கொள்ளையிடுவதற்கே வந்தான் என்பது அவன் திருட்டுத்தனமாக உள்நுழைந்தமையானும் அறைக்குள் உள்ளவர்கள் எல்லாரும் தூங்குகிறார்களா என்று தான் திட்டமாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு நிற்பது போல அவன் கதவண்டையில் சிலநேரம் மிகவும் எச்சரிக்கை யோடு நின்றமையானும் இனிது விளங்குவதாயிற்று. முகமறைப் பிட்டு அறையு ள் நுழைந்தவன் அங்ஙனஞ் சிலநேரம் நின்றதற்கு உருவெளித்தோற்றம் போன்ற அளவு கடந்த தன் அழகின் காட்சியே காரணமாய் இருந்ததென்று, பெண்களுக்குரிய வீம்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/119&oldid=1581374" இலிருந்து மீள்விக்கப்பட்டது