உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

91

கள்ளமும் முற்றும் இல்லாத குமுதவல்லி சிறிதாயினும் நினைத்தது இல்லை.

இங்ஙனம் நாகநாட்டரசி உற்ற சமயத்தில் அருமையான மன வலிமை காட்டினதை இதனைப்படிப்பவர் தெரிந்து கொண்டனர்; இத்தகைய அற்புதச் செய்கை தனது நிலை மையை உணர்ந்து கை விட்ட உணர்ச்சியால் மாத்திரம் வருவதாகும். நல்லான் முற்றும் வஞ்சிக்கப்பட்டவன் ஆனான்: குமுதவல்லி இன்னும் தூங்குகிறாள் என்றே அவன் மெய்யாக நினைத்தான். ஓசை செய்யாமல் அவன் கட்டிலண்டை வந்தான். இதிற் சில கணங்கள் சென்றன,--பறந்து போகும் இச்சிறிய கணப்பொழுதில் மனிதனுக்கு ஆறு சுவாச ஓட்டங்களே நடைபெறக்கூடும்; என்றாலும் இவை குமுதவல்லிக்குப் பலயுகங்களாய்த் தோன்றின. முகமறைப்பிட்டவன் கிட்டவே வந்திட்டான். இப்போது அணுவளவு கூடக் குமுதவல்லி தன் கண்ணிதழ்களைத் திறக்கத் துணியவில்லை; ஏனென்றால் கண் விழிக்கும் அடையாளம் சிறிதாயினும் காணப்பட்டால் தன்மேல் உடனே ஆழ்த்துவதற்கு சைந்தவண்ணமாய் அவன் கையிற் குத்துவாள் பிடிக்கப்பட்டி ருக்கிற தென்பதை அவள் இயற்கையுணர்ச்சியால் தெரிந்தாள். உலக சோதனைகளிற் சிறிதும் அனுபவம் இல்லாதவளும், தனது மனத் துணிவை இதற்குமுன் காட்டி வழக்கப்படாதவளும் ஆன இளங்குமுதவல்லி, எந்தக் காலத்திலேனும் எந்த இடத்திலேனும் இப்படிப்பட்ட சமயங்களில் ஆண்மை காட்டிய வீரமக்களுக்குப் பெருமைதருதற்கு உரிய நிறைந்த நிலையிலே தனது மன வலிமையை இங்ஙனம் உறுதிப்படுத்திக் காட்டியது மிக வியப்பாயிருந்தது.

இன்னும் அவள் உறங்குவது போலவே காணப்பட்டாள். இன்னும் நல்லான் கட்டிலை அணுகிப் போயினான். அவன் அவள் மேற் குனிந்து நோக்கினான்: அவன் விடும் மூச்சானது அவள் கன்னங்களில் மேல் வீசியது. “ஓ தெய்வமே! அவளது உயிரைப் போக்கவா அவன் எண்ணினான்? ஓர் அழகியகை கட்டிலின் ஓரத்தின் மேற்றுவண்டு கிடந்ததென முன்னமே மொழிந்திட்டோம்: மெழுகுதிரியை ஒத்த அவள் விரல்கள் ஒன்றின்மேல், ஒரே ஒரு கல் அழுந்திப் புதுமையாகவும் ஒருவகையான வேலைத்திறம் வாய்ந்ததாகவுஞ் செய்யப்பட்ட ஒற்றை மோதிரம் இடப்பட்டு இருந்தது. இதில் அழுத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/120&oldid=1581375" இலிருந்து மீள்விக்கப்பட்டது