உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் 13

பட்டிருந்தது சிவப்புக்கல்: அதன் மேல் சுன்னம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. முகமறைத்து நுழைந்தவன் விரல்களா னவை அந்த மோதிரத்தை மெல்லெனத் தொட்டன. மணிக்கலம் ஒன்று அழகு பெறச் செய்த அவ்வழகிய கையில் அஃதிருந்த இடத்தினின்றும் அதனை அவன் மெதுவாகக் சுழற்றத் தொடங்கினான்.

குமுதவல்லிக்கு இதுதான் மிகவுஞ்சோதனையான நேரமாய் இருந்தது. அணிகலன்கள் கழற்றி வைத்த மேசை மேல் விலை மிக்க மணிகள் இருந்தன. கிடைத்தற்கரிய முத்துமாலை யொன்று அவள் கழுத்திற் சூழப்பட்டிருந்தது; அவளது மற்றக்கையிலோ விலையுர்ந்த மோதிரங்கள் பல அணியப்பட்டி ருந்தன. முகமறைத்த கள்வன் இவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டிருக்கலாம், குமுதவல்லியும் தான் உயிர் பிழைத்ததை எண்ணிப்பார்த்து அவற்றை இழந்தமைக்கு நகையாடியிருப்பாள். ஆனால் இந்த ஒரு மோதிரத்தை--அதற்குள்ள இயல்பான விலையைக் காட்டிலும் மிகவும் பெரிதாய் அவளால் மதிக்கப்பட்டிருந்த இந்த மோதிரத்தைச்--சில காரணங்கள் பற்றி மந்திரக்கெவிட்டுக்குச் செலுத்தும் வணக்கமெல்லாம் அவளாற் செலுத்துப்பட்டுவந்த இந்த மணிக்கலத்தை--அவளிடத் தினின்றும் பறித்துக் கொள்வதென்றால், ஓ! இஃது இதுகாறும் அவள் தன்னுள் அடக்கி வைத்திருந்த கூக்குரலை அவள் இதழ்களினின்றும் வெளிப்படுத்துவதற்குப் போதுமானதாம் அன்றோ! அப்படியிருந்தும் அவள் இன்னும் தன் மனவு றுதியை விடாமற் பிடித்திருந்தாள்: அவள் அசையவில்லை-- தூக்கத்திற்கு உரிய அடையாளங்களுள் ஒன்றான உயிர்ப்பு முறையினின்று மாறவும் இல்லை. இந்தக் கொள்ளைக்காரன் தன்னைக் கொலைகாரனாகச் செய்து கொள்ள வேண்டுவதும் அகத்தியம் எனக் கருதுவானாயின் திகிலான தன்றொழிலைச் செய்வதற்குக் குத்துவாள் அருகாமையில் இருக்கிறதென்பதை அவள் தெரிந்தாள். ஒருவேளை, ஓர் இமை கொட்டும் நேரங் குமுதவல்லியின் கன்னத்தில் நிறம் மாறியிருக்கலாம். அப்படி நிகழ்ந்ததானால் அது நல்லானாற் காணக் கூடாதபடி அவ்வளவு சொற்பமாய் இருந்திருக்க வேண்டும்; அல்லது, அவன் அதனைக் குமுதவல்லியின் முகத்தின்மேற் பட்ட விளக்கொளியின் அசைவாக எண்ணியிருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/121&oldid=1581376" இலிருந்து மீள்விக்கப்பட்டது