உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

93

மோதிரமானது அவள் கையினின்றுங் சுழற்றப்பட்டு விட்டது; அக்கொள்ளைக்காரனின் உடையிலிருந்து மெல்லென உண்டான சரசர என்னும் ஓசையால் தன் கட்டிலின் பக்கத்தே யிருந்து அவன் போகின்றான் என்பதனை அவள் அறியலானாள். இப்போதுஅவள் தன் கண்மடல்களை மிகவுஞ் சிறுகத் தூக்குவதற்குத் துணிவு கொண்டாள்: நல்லானுடைய உயர்ந்த உருவத்தைத் தனது கீழ்க் கண்ணாற் சிறிது பார்த்தாள்; மறுபடியும் அவளைப் பார்க்க அவன் திரும்புவதற்குள், அவள் கரிய இறைவிளிம்புகளானவை கன்னத்தின் மேற்றங்கியிருந்தன. அவன் தனக்குப் பின்னே கதவை மெதுவாகச் சாத்துதலையும் கேட்டாள்; பின்னுஞ் சில நிமிஷங்கள் செல்ல அவ்வறை வரிசைகளுக்குப் புறம்பேயுள்ள வாயிற் படியை அவன் தாண்டிச் சென்றிருப்பான் என உறுதி கொண்டாள். இப்போது அவள் இடரினின்றும் விலகினாள்: ஆபத்து ஒழிந்தது! திகில் மிக்க அச்சோதனை நடந்தேறுங்காறும் அவளைத் தாங்கி வந்த அதிசயமான மனவலிமையானது, இப்போது ஒரு நொடிப் பொழுதில் இற்றுப் போயினது; உணர்வுகளைக் கட்டி ஆண்ட அத் தெய்வீக வலிமையானது பிறகு அங்ஙனம் அவ்வளவுக்கு மறுதலைப்பட்டு நெகிழ்ந்துபோதல் இயற்கையே யாகும். அதன் பின்னே, நாகநாட்டரசி தன் குரலை எழுப்பித் தன் பாங்கி மார்களை விழிப்பிக்க நினைத்த அக்கணத்திலே, சடுதியில் ஒரு களைப்பானது அவளை வந்து பற்றியது--அவள் உணர்வு இழந்து மன இருளிற் புதைந்து கிடந்தாள்.

அங்ஙனம் பல நாழிகை நேரம் அவள் கிடந்தாள் ஏனெனில் அவளுக்குத் திரும்பவும் உணர்வு வரத் தொடங்கிய பொழுது விளக்கானது அவிக்கப்பட்டிருந்தது--சாளரங்களின் வழியாயும் திரைகளின் நடுவேயுள்ள திறப்பின் வழியாகவும் பகலவன் கதிர்கள் புகுந்து துலங்கின. மிகவும் இளைப்படையச் செய்து கிடக்கையிலே கிடத்தி விட்ட தீயகனவினின்றும் எழுந்திருப்பாள் போலக் குமுதவல்லி சிறிது சிறிதாகக் கண்விழித்தாள். கலக்கம் அடைந்த தன் நினைவுகளை அதனின்று மீட்கவும், தன் எண்ணங்களை ஒன்று சேர்க்கவும் மாட்டாதவளாய் அவள் நெடுநேரம் அசைவின்றிக் கிடந்தாள். கடைசியாக அவை யெல்லாம் கனவு அல்ல என்னும் சமுசயம் அவள் மனத்தில் நுழையலாயிற்று, என்றாலும் நெடுநேரம் தியங்கிக் கிடந்ததன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/122&oldid=1581377" இலிருந்து மீள்விக்கப்பட்டது