உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் 13

பயனாக அவள் மிகவும் சோர்வு அடைந்த வளாயும் பிராணசக்தி இல்லாதவளாயும் இருந்தமையால், இடம் ம் பெயர்ந்து பார்ப்பதற்கே சில நிமிஷங்கள் கழிந்தன; அங்ஙனம் பார்த்தி ருப்பாளானால் அது சமுசய மெல்லாம் நீக்கிக் கண்டது கனவு அன்று என மெய்ப்படுத்தியிருக்கும். அப்படியிருந்தாலுங் கடைசியாக அவள் தனது கையைத் தூக்கிப் பார்த்தாள்; மோதிரம் போய்விட்டது.

முன்னாட் பயணத்தின் களைப்பினால் இன்னும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த தன் பாங்கிமார்களை இப்போது எழுப்பி விட்டாள்; கலவரமானது ஏதோ நடந்திருக்கிறது என அவ்விரு பெண்களும் அச்சம் உற்றார்கள்: ஏனெனில், தங்கள் தலைவியின் குரல் ஒலி கலக்கமும் வெருட்சியும் நிறைந்து இருந்தது.அவர்கள் அவளிடம் பறந்து ஓடினார்கள்: சுகத்தின் குறியாகச் செந்தாமரை வண்ணமானது அல்லியின் விளங்கு நிறத்தோடு கனிந்து மெல்லெனக் கலந்து தோயப்பெற்ற அவளது முகத்திலே வெளிறின நிறத்தைக் காண்டலும் பெருந்திகில் அடையப் பெற்றார்கள். தெய்வப் பேரின்பமே ஆழ்ந்து குடிகொளப் பெற்றவை போலக் காணப்படும் அவள்தன் பருத்த அழகிய நீலவிழிகளுங்கூட, இதற்குமுன் அப் பாங்கிமார் என்றும் பார்த்திராத ஒரு பொல்லாத தோற்றத்தை இப்போது உடையதாயிருந்தது. கலங்கிய சொல்லிலும், வருத்தம் மிக்க சொல்லசைவிலும், முறை பிறழ்ந்த சொற்றொடர் களிலும் நடந்த கதையைக் குமுதவல்லி சொல்லக் கூடியவளா னாள்; அவ்வாறு அதனைச் சொல்லிக் கொண்டு வருகையில் சுந்தராம்பாள் ஞானாம்பாள் இருவரும் பெருந் திகிலோடும் ஐயுறவோடும், அச்சங்கலந்த ஆவலோடும் அதனை உற்றுக் கேட்டு வந்தார்கள். குமுதவல்லி சொல்லிய சொற்களிலிருந்து அவள் தனக்குள்ள உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும்விட இழந்து போன அம்மோதிரத்தை மிக்கதோர் அரும் பொருளாக மதித்திருந்தாள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளலா னார்கள். இதற்கு முன் அவள் அம்மோதிரத்தைச் சுட்டி ஏதும் பேசக் கேட்டது இல்லாமை யால், இச்செய்தி அப் பெண்களுக்கு முழுதும் புதிதாய் இருந்தது: உண்மையிலே அவர்கள் நினைப்பிடக்கூடிய வரையில் சில நாட்களுக்கு முன்னே தான் தங்கள் தலைவியின் விரலிலே அவர்கள் அதனைப் பார்த்ததும், சுந்தராம்பாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/123&oldid=1581378" இலிருந்து மீள்விக்கப்பட்டது