உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடை

குமுதவல்லி நாகநாட்டரசி

95

ஞானாம்பாள் இருவரும் தம் தலைவியினிடத்து மிக்க பற்றுதல் யவர் களாதலால், அவள் முகமறைத்து வந்த கள்வன் வாளுக்குத் தப்பிப்பிழைத்ததைப் பற்றி நெஞ்சங்கரைந்து வாழ்த்துரை சொரிந்தார்கள்: அவளுயிரைத் தப்புவித்ததாகிய அந்த மன வலிமையைப் பற்றிக் கலக்கம் மிக்க அதிசயத்தோடு வியந்து பேசினார்கள்.

அவ்விரு பெண்களில் மூத்தவளும், மான் விழிபோல் மெல்லென்ற கரிய நிறங்கலந்த பருத்த விழிகளோடு கருங் கூந்தலும் வாய்ந்த அழகியாளும் ஆன சுந்தராம்பாள் தன் தலைவியை நோக்கிப் “பெருமாட்டியார் மறுபடியும் அக்கீழ் மகனைத் தெரிந்து கொள்ளக் கூடுமே?” என்று வினாயினாள்.

66

ல்லை--அவன் முகத்தை நான் பார்க்கவில்லை, அவன் உடம்பு நீண்டிருந்தது--யான் மதிப்பிடக்கூடும் அளவில் ஒல்லியாகவே இருந்தான்,” என்று குமுதவல்லி மறுமொழி கூறினாள்.

“எங்கோமாட்டி, அவன் உடுப்பு?" என்று பரபரப்பாய் இடையிட்டு வினாவினாள், மேற்கணவாய் மலைநாட்டு மகளிர்க்குள்ள அரிய வனப்பின்படி நெளிப்பட்ட கூந்தலும் கரு விளம்பூப் போன்ற கண்களும் வாய்ந்த அழகிய ஞானாம்பாள் என்னும் இளம் பெண்.

66

அதற்கு நாகநாட்டரசி "நான் அதனை விளக்கமாக விரித்துச் சொல்லக் கூடவில்லை.” என்று விடைகூறிப் பின்னும் 'என்றாலும் அது நீலகிரி நாட்டான் உடை போலிருந்ததென்று நினைக்கின்றேன்--இல்லை! இன்னதென்று என்னாற் சொல்லக் வில்லை!” என்று, குழம்பிய தன் நினைவுகளை ஒழுங்குபடுத்துவாள் போல் அழகின் மிக்க கையாற் புருவத்தைத் தடவிக்கொண்டே கூட்டிச் சொன்னாள்.

கூட

சுந்தராம்பாள் நினைவிழந்த அதிசயத்தோடும் சிந்தித்த வளாய், “அவன் யாராய் இருக்கக்கூடும்?” என்று கேட்டாள்: பிறகு திடீரென ஒரு நினைவு தோன்றினவளாய் அணிகல மேசையண்டை விரைந்து போய், “இல்லை! பெருமாட்டியார் சொன்ன வண்ணமே தங்கள் மோதிரத்தை யன்றி வேறொன் றையும் அவன் எடுத்துக் கொண்டு போகவில்லை.” என வியந்து சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/124&oldid=1581379" இலிருந்து மீள்விக்கப்பட்டது