உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

66

மறைமலையம் 13

‘அவன் சாதாரண கள்வனாய் இருக்க முடியாது,” என்று ஞானாம்பாள் படும்படி மொழிந்தாள்: “அவனுக்கு ஏதோ வேறே நோக்கம் இருந்திருக்க வேண்டும்--

66

ஆம்! நிச்சயமாய் அவள் வெறுங்கொள்ளையிடும் எண்ணத்தைத் தவிர வேறு நோக்கம் உள்ளவனாகத் தான் இருக்க வேண்டும்!" என்று குமுதவல்லி உரத்துச் சொன்னாள். “இந்த எண்ணம் எனக்கு முன்னே படவில்லை. இஃது என்ன கருத்துப்பற்றி இருக்கக் கூடும்? இந்த மோதிரம் -இந்த அதே மோதிரம் அவ்வாறு ஆவதற்கு--” என்று சொல்லியவள், தன் மனத்தில் நிகழ்வதைத் தன் பாங்கிமார்க்குத் தெரியப்படுத்த விருப்பம் இல்லாதவள் போல இடையிலே பேச்சை நிறுத்திக் கொண்டாள்; பின்னும் ஆழச் சிந்தித்துப் பார்த்தாள்.

“நாம் கூக்குரலிடுவோம்!” என்றாள் சுந்தராம்பாள் என்னுங் கருங்குழலாள். “ஒரு வேளை அந்தக் கொள்ளைக்காரன் இன்னும் இந்தத் சத்திரத்திலேயே இருக்கலாம்.”

66

அதற்கு “ஆம்!” என்று, இக்கலவரத்தால் அவிழ்ந்து அழகிய தன் முகத்தை மறைத்த வெளிக்கூந்தலை விலக்கிக் காண்டே ஞானாம்பாள் கூவினாள். "அதிகாரிகளை அழைப்பிக்க வேண்டும்! தேடிப்பார்த்து விசாரணை செய்ய வேண்டும்!”

இங்ஙனஞ் சொல்லிக் கொண்டே தன் பாங்கிமார் இருவரும் கதவைத் திறக்க ஓடிய போது “நில்லுங்கள்” எனக் குமுதவல்லி விரைந்து மொழிந்தாள். "சிறிது சிந்தித்துப் பார்த்தால் இதன் பொருட்டு ஏதும் முயற்சி செய்யத் துவங்கல் பயன்படாதென்பது நமது அனுபவ அறிவுக்குத் தோன்றும். இப்போது விடிந்து ஐந்து நாழிகை ஆயிற்று." என்று சாளரத்தின் வழித்தோன்றிய வெயிலைப் பார்த்தவளாய்ப் பின்னும், “பகலவன் ஏற்கெனவே கீழ்த்திசையிற் கிளம்பிப் பல நாழிகை ஆய்விட்டன; அந்தக் கொள்ளைக்காரன் சென்ற இரவில் இந்தச்சத்திரத்தினுள் இருந்தானாயின், இந்நேரம் அவன் இதனை விட்டு நெடுந்தூரம் போய் விட்டான் என்பதை நிச்சயமாய் அறிமின்கள்.” எனத் தொடர்ந்து உரைத்தாள்.

“அப்படியானால் இழந்த மோதிரத்தைத் வெளிப்படுத்து தற்குப் பெருமாட்டியார் ஒன்றும் செய்யப் போகிறதில்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/125&oldid=1581380" இலிருந்து மீள்விக்கப்பட்டது