உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

97

என்று சுந்தராம்பாள் வினவினாள். தம் இளம்பெருமாட்டி இப்போது எழுந்து உட்கார்ந்திருந்த கட்டிலண்டை தன்றோ ழியும் தானுமாகத் திரும்பி வருகையில் ஞானாம்பாள் “குற்ற வாளியைத் தண்டனை செய்வதற்கு?" எனச் சேர்ந்து வினா வினாள்.

66

அது பயன் படாதாகும் என அஞ்சுகின்றேன்--இல்லை, பின்னும் உறுதியாகவே நம்புகின்றேன். யான் சொல்வதை அமைதியோடு கேளுங்கள். என்னிடத்தினின்று அந்த மோதிரத் தைக் கவர்ந்து கொண்டு போனதைப் பார்த்தால், அந்த மனிதன் யாராயிருந்தாலும் ஏதோ ஆழமான கருத்துடைய வனாய் இருக்க வேண்டும்; அவன் கருத்து இன்னதென்று யானே அறிந்து கொள்ளக் கூடவும் இல்லை, யூகித்தறியவும் முடிய வில்லை. பாருங்கள் அவன் எவ்வளவு முன் எச்சரிக்கை யோடு வந்திருக்கின்றான்! அவனது முகத்தின் மேலோ ஒருமறைப்பு-- அவன் நடவடிக்கைகளோ மிகவும் மறை பொரு ளான கள்ளத்தனத்தோடு கூடியவை-அவன் அப்பொழுது அணிந்தி ருந்த உடுப்பே அப்போதைக்குக் கொண்டதன்றி மறுபடி எக்காலத்தும் தரியாத வெறும் வேடமே போலும்! ஆகையால் தன் கருத்து முற்றுப் பெற்றவுடனே இங்குச் சிறிதுந் தாமதியாது தன்னைக் பாதுகாத்துக் கொண்டு போக அவன் தவற மாட்டான் என்பதை உண்மையாய் நம்பியிருங்கள்.” என்று குமுதவல்லி துயரம் மிக்க சொற்களோடும் பார்வையோடும் மொழிந் திட்டாள்.

சுந்தராம்பாள் ஞானாம்பாள் இருவரும் குமுதவல்லி சொல்லியவற்றின் உண்மையைச் சோர்வுற்ற தமது பார்வையால் ஒப்புக் கொண்டு காட்டினர்.

66

"என் அன்புள்ள பெண்களே, யாரும் என்னைக் கவனியாத வண்ணம் யான் யாத்திரை செல்கின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்--” என்று நாகநாட்டரசி பின்னுந் தொடர்ந்தாள்.

ஓ! தக்க ஆண்துணையோடு வழிச்செல்லும்படி யான் கழறியதைப் பெருமாட்டியார் பின்பற்றத் திருவுளஞ் செய்திருந் தால்!" என்று சுந்தராம்பாள் உரத்துச் சொன்னாள்.

உடனே

6699

ஞானாம்பாள் "முக்கியமான அத்தனை தொலை தூரம்!” என்று நடு நுழைந்து கூறினாள். இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/126&oldid=1581381" இலிருந்து மீள்விக்கப்பட்டது