உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் 13

நிகழ்ந்த இடரைக் குறித்துப் பார்க்கும் போது, தன் பாங்கிமார் கள்ளமின்றிச் சொல்லிய சொற்களைப் பற்றிக் குமுதவல்லி புன் முறுவல் செய்து, “ஒரு படை முழுதுமே நமக்கு வழித்துணையாக வந்தாலும், உண்மையில் வலுக்கட்டாயமாக அன்றி மிகவும் இரண்டகமான தந்திரத்தால் விளைந்த இப்பொல்லாங் கினின்றும் என்னைப் பாதுகாப்பதற்கு அது போதுமென்று எனக்குத் தோன்றவில்லை.” என்றாள்.

இந்தச் சத்திரக்காரருக்கு அது நடந்த வரலாற்றைச் சொல்வது நல்லதென்று பெருமாட்டியார் கருதவில்லையோ?” என்று சுந்தராம்பாள் கேட்டாள்.

66

அந்த விஷயத்தைப் பற்றி உன்னுடன் நான் பேசலா மென்றிருந்த சமயத்தில், நீ நடுவே உன் கருத்தைச் சொல்ல லானாய். என்னை இன்னாரெனப் பிறர் அறியாதபடி யான் மறைவாகச் செல்வது எனது நோக்கத்திற்கு இணங்கின தாகு மென்பதை யான் முன்னமே உனக்கு நினைவூட்டத் தொடங் கினேன் ஆகவே, என்னைப் பிறர் ஏதும் சுட்டிக் கவனிக்கும்படி செய்து கொள்ள விருப்பம் இல்லாதவளாய் இருக்கின்றேன். ஆகையால், உனது ஆலோசனையைத் தழுவி இந்த மடத்தின் தலைவருக்கு எனது குறையை அறிவிப்பே னாயின், அவர் உடனே தமது மடத்தின் பெயரைக் காப்பாற்று வதற்காக இதனைத் தீர விசாரணை செய்ய வேண்டுமென்று கட்டாயப் படுத்துவார்: அதிகாரிகள் இதனுதவிக்காக

அழைக்கப்படுவர்--இந்த

மோதிரத்தைக் குறிப்பாய்க் கைப் பற்றுவதற்குக் காரணமாய் நின்ற கருத்தின் உளவை வெளிப்படுத்துவதற்காகத் திருடினவன் யாராயிருக்கலாம் என்று என்னைக் கேள்வி மேற் கேள்வி கேட்பார்கள்--இப்படிப்பட்ட பரிசோதனைகளின் ஊடே செல்ல யான் சிறிதும் விரும்பவில்லை. எனவே, எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்குங்கால், எனக்கு நேர்ந்த துன்பத்தை யார்க்குந் தெரிவியாமற் சும்மா இருப்பதே நல்லது." என்று மறுமொழி கூறினாள்.

“என்றாலும் என் அன்புள்ள செல்வியே, இதனைப் பொறுத்து இருத்தல் அரிதேயாம்!" என்று சொல்லிக் கொண்டே சுந்தராம்பாள் குமுதவல்லியின் கையை எடுத்து அன்போடும் வணக்கத்தோடும் தன் இதழ்களில் அழுந்த முத்தம் வைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/127&oldid=1581382" இலிருந்து மீள்விக்கப்பட்டது