உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குமுதவல்லி நாகநாட்டரசி

99

“ஆம், அரிதுதான்!"என்று கூடச் சொல்லிக் கொண்டே ஞானாம்பாள் குமுதவல்லியின் மற்றக் கையை எடுத்து அங்ஙனமே முத்தம் வைத்தாள்.

66

அஃது அரிதாயிருந்தாலும், நமக்கு வேறு வழியில்லா மையால் அப்படித்தான் செய்ய வேண்டியிருக் கின்றது.” என்று குமுதவல்லி சேர்ந்து பேசினாள். “ ஆகையால், என் இளம் பெண்களே, இந்த நஷ்டத்தை எந்த உயிருக்குஞ் சொல்லா திருக்கும்படி யான் உங்களுக்குக் கட்டளை யிடுகின்றேன். நீலகிரிக்கு நாம் நம் வழியே தொடர்ந்து செல்வோம்: நாம் இப்போது கற்றுக் கொண்ட பாடமானது இனி நம்மை இன்னும் எச்சரிக்கையாய் இருக்கும்படி செய்யும்." என்று சொல்லியதும், அவள் பாங்கிமார் தம் தலைவியை அலங்காரஞ் செய்வதற்கு வேண்டுவனவற்றைச் சித்தம்பண்ணப் போனார்கள். உடனே குமுதவல்லி தனக்குள் சிந்தித்து மெல்லிய குரலில் “அந்தோ! இப்போது அம்மோதிரத்தை இழந்து விட்டமையால் அந்தரங்கமான இப்பிரயாணத்தின் நோக்கமும் இழக்கப்பட்டுப் போமே! என்றாலும், நான் விடாமல் முயன்று பார்க்க வேண்டும்: யான் அந்த மோதிரத்தை யார்கையிற் கொடுக்கும்படி கட்டளையிடப்பட்டேனோ அவருக்கு என்னிடத்திலிருந்து அது தவறிப் போன தீவினையை நான் விவரித்துச் சொல்லலாம் என்று நினைக்கின்றேன்." என்று சொல்லிக் கொண்டாள்.

இச் சொற்கள் மிக மெதுவான குரலிற் சொல்லப்பட்ட மையால் அவ்வறையின் கடைசியிலே வெவ்வேறு மூலை மூ ல களிலிருந்த சுந்தராம்பாள் ஞானாம்பாள் செவிகளுக்கு அவை எட்டவில்லை. சென்ற இரவின் பயங்கரமான நிகழ்ச்சிக்குப் பின் வந்த நீண்ட சோகக் களைப்பினின்றும் இப்போது குமுதவல்லி மிகவுஞ் சுகப்பட்டமையால், சிதறுண்ட தன் மனமுயற்சிகளைத் திரும்பவும் ஒன்று கூட்டத் தன்னால் ஆனமட்டும் முயன்றாள்.

பிறகு தான் பூணவேண்டுவனவெல்லாம் முற்றும் பூண்டாள்-- காலையுணவு செய்யப்பட்டது--புறப்படுவதற்குக் குதிரைகளைச் சித்தஞ் செய்யும்படி கட்டளை தரப்பட்டது. ஆனால் சத்திரத்தலைவனோ இப்போது எதிரே வந்து, தகுந்த மரியாதையோடு தன் அழகிய விருந்தினருக்குத் தான் சொல்ல வேண்டியிருப்பதைச் சொல்லும் வண்ணம் அனுமதி தரும்படி கேட்டான். குமுதவல்லி அவனைப் பேசும்படி கட்டளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/128&oldid=1581383" இலிருந்து மீள்விக்கப்பட்டது