உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் - 13

கொடுத்தாள்; அப்படிக் கொடுக்கையில் சிறிது கவலையும் ஐயுறவுங் கொண்டாள்; ஏனென்றால், இனி வெளிவருஞ் செய்தி முன்னாள் இரவின் நிகழ்ச்சியோடு சம்பந்தப்படக் கூடுமென்று எண்ணினாள்.

நான் கேள்விப்பட்டபடி, பெருமாட்டி, தாங்கள் தங்கள் பாங்கிமாரோடு மாத்திரம் பயணம் போகக் குறித்திருக்கிறீர் களோ? அங்ஙனஞ் செல்வது அறிவுடைமைக்குச் சிறிதும் பொருந்தாதென்றும், உண்மையாகவே அது பேரிடராய் முடியும் என்றும் தங்களுக்கு யான் தாழ்மையாகத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.” என்று அந்தச் சத்திரக்காரன் தொடர்ந்து

பேசினான்.

66

அதனை விவரமாய்ச் சொல்லும்” என்று குமுதவல்லி மிகுந்த தவிப்போடும் கூறினாள்.

உடனே சத்திரத்தலைவன் சொல்வானாயினன்: ஒரு வகையில் மலைநாடனென்றாலும் மற்றொரு வகையில் வழிப் பறிக்காரனான ஓர் ஆளைப்பற்றித் தாங்கள் எப்போதா யினும் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அவன் மலைநாடனென்ற வகையில் நமக்கு இயற்கைப் பகைவர்களான சோழ நாட்டார்க்கு மிகுந்த தீமை செய்திருந்தாலும் கொள்ளைக்காரன் என்ற வகையில் அவ்வளவு மிகுந்த துன்பத்தைத் தன் சொந்த நாட்டார்க்கும் செய்து வந்திருக்கின்றான். தன் படைக் கலன்களை நமக்கு எதிராகவே சிலசமயங்களில் திருப்பிவிடும் அத்தகைய வீரனுதவியை நாம் வேண்டாமலே இருந்து விடக் கூடுமே."

66

க்

திண்ணமாய் நீர் நல்லானைப் பற்றித் தான் பேசுகின்றீர்,” என்று குமுதவல்லி சொன்னாள்.

66

இதற்குச் சத்திரத்தலைவன் இணைந்து பேசுவானாய் வேறு யாரையும் அன்று, பெருமாட்டி, அவனும் அவனது இழிந்த மறக்கூட்டமும் இந்தப்பக்கங்களில் அடிக்கடி வருவதில்லை, என்றாலும்--” என்று முடிப்பதற்குள்; குமுதவல்லி தன் கன்னங்கள் வெளிறப் பெற்றவளாய்ப், “பயங்கரமான நல்லானும் சூறையிடும் அவன் ஆட்களும் இந்தப் பிரதேசத்தில் வந்து இப்போது தொந்தரை செய்கிறார்கள் என்பது ஒவ்வுமா?” என்று கூவிக் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/129&oldid=1581384" இலிருந்து மீள்விக்கப்பட்டது