உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குமுதவல்லி நாகநாட்டரசி

101

பெருமாட்டி, அது மெய்தான்." என்று சத்திரக்காரன் விடை பகர்ந்தான்.

“எனினும், ஒரு குறிப்பிட்ட பாதை வழியே நான் பயணம் போனால் ஒரு படையைத் துணைகூட்டி வந்தது போல அவனது கொள்ளைக்குத் தப்பலாம் என்று உறுத்திச் சொல்லக் கேட்டேன். இல்லை, இன்னும் படைக்கலம் பூண்டோரைத் துணைகூட்டிச் செல்வது அவசியம் அன்று எனவுஞ் சொல்லக் கேட்டேன்; அதனாலேதான் நான் என் பாங்கி மாரோடு பயணம்போகக் கண்டீர். இவ்வுறுதி மொழிகளை என்னிடம் புகன்றவன் நீலகிரியினின்றும் வந்த ஓர் இளைஞன் ஆவன் - அவன் நன்மையே கருதுபவன், நம்பிக்கையுள்ளவன் என்று நினைப்ப தற்கு நல்ல காரணங்கள் உண்டு; எனது வீட்டுக்கு என்னிடம் அவன் வந்தபோது அவனிடம் நம்பகமான செய்தி ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அவன் நீலகிரியில் நிலையாய் இருப்பவன் ஆதலால், வழிப்பறிகாரர் தலைவனான நல்லானு டைய வழக்கமான பழக்கங்களைப்பற்றி அவன் செவ்வையாகத் தெரிந்திருக்க வேண்டுமென்று யான் எண்ணினேன்; தொலை விலுள்ள வேறு நாட்டில் வசிக்கும் நானோ நிலைப்படாத ஊரார் பேச்சைக்கொண்டும் பரும் படியான செய்தி களைக் கொண்டும் அவன் பழக்கங்களைப் பற்றிச் சிறிது தெரிந்திருக்கி றேன்.” எனக் குழுதவல்லி கூறினாள்.

"பெருமாட்டி,. உங்களுக்கு அறிவித்தவன் தான் எண்ணியபடி பேசினான் என்பதில் ஐயமில்லை; தான் பிறந்த மலைகளின் நடுவிலேயே வழக்கமாய்த் தங்கியிருந்து கொண்டு அதற்கு அருகாமையில் வரும் தனது இரைமேற் பாய்ந்து அதனை அடித்துக் கொண்டுபோகுங் கழுகைப் போன்றவன் நல்லானாகையால், பெரும்பாலும் அவன் உண்மையே பேசி னான். என்றாலும் அக்கழுகு சிலகாலங்களில் மேற் கணவாய் மலைகளை விட்டு நெடுந்தூரம் பறந்து போய்ப் பச்சென்று செழுமையாய் இருக்கும் மைதானவெளிகளில் மேய்ந்து காண்டிருக்கும் ஆட்டுக்குட்டியை இறாஞ்சிப் போதலும் உண்டு. இப்படியே நல்லானுஞ் செய்வதுண்டு அவன் ஆட்களிற்சிலர் சென்ற இரண்டொரு நாளாய் இந்தப் பக்கங் களிற் காணப்பட்டார்கள். பெருமாட்டி, இன்னும் என்ன சொல்வது திடுக்கிடாதேயுங்கள் - திகில் கொள்ளாதேயுங்கள் -

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/130&oldid=1581385" இலிருந்து மீள்விக்கப்பட்டது