உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் – 13

ர் ஒழிந்துபோயிற்று! நல்லான்" என்று சத்திரத் தலைவன் தான் சொல்லுஞ்செய்திக்கு இணங்கச் செய்துங் காட்டு வோனாய் மெதுவான குரலில் பின்னும் நல்லான் இந்தச் சத்திரத் தினுள்ளே சென்ற இரவு தங்கியிருந்தான்!” என்று மறுமொழி கூறினான்.

திடுக்கிடவேண்டாம் எனவும் திகிற்படவேண்டா மெனவும் அங்ஙனம் மனவருத்தத்தோடு கேட்டுக் கொள்ளப் பட்டாலும் அழகிற்சிறந்த குமுதவல்லி கதுமென மிகவுந் திடுக்கிட்டாள். பெருந்திகிலானது அவள் முகத்தின்மேற் புலப்பட்டுத் தோன்றியது. சத்திரக்காரன் அச்செய்தியை அறிவித்த அந்த நேரத்திலேயே அவள் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. தன் அறைக்குள் முகம் மறைத்து வந்தவன் கிலிபிடிக்கப் பண்ணும் கொள்ளைக்காரனாய் இருக்கக் கூடுமோ?

“தாங்கள் அமர்ந்திருக்க வேண்டுமென யான் தங்களைக் கஞ்சிக் கேட்டும், பெருமாட்டி! தாங்கள் இங்ஙனந் திடுக் கிட்டது ஓ! ஒருவியப்பன்று; ஏ ஏனென்றால், அவ்வளவு பயங்கரமான ஓர் ஆள் இக்கட்டிடத்தினுள்ளே தங்கியிருந்தான் என்பதை எண்ணிப்பார்த்தால் அஃது ஒரு பெருந்திகிலான காரியமாய்த் தான் இருக்கும்.” என்று சத்திரக்காரன் திரும்பவும் அதனை எடுத்துப் பேசினான்.

உடனே குமுதவல்லி விரைந்து “அவன் எப்படி இருப்பான் என்பதை எனக்குச் சொல்லிக்காட்டும். உம்மாற் கூடிய வரையில் நுட்பமாக அவனை முடிமுதல் அடிகாறும் தெளிவாய்ச் சால்லிக்காட்டும்; ஏனெனில் ஏனெனில் அலுவலின் பொருட்டு வழிநடையாய்ப் போவார் எவர்க்கும் அச்செய்தி மிகவும் பயனுடையதாயிருக்கலாம்” என்று கூறினாள்.

“நானே அவனைச் செவ்வையாகப் பார்த்ததில்லை, பெருமாட்டி, ஆனாலும் நான் இவ்வளவு உங்களுக்குச் சொல்லக்கூடும். அவன் தீத்தொழில் முதிர்ந்தவனாயிருந்தாலும் ஆண்டில் இளையவனே - நாற்பத்தைந்து வயதுள்ளவனாகிய நான் அவனுக்குத் தகப்பன் என்று சொல்லக் கூடியதாயிருக்கும். பிறகு, அவள் உடம்பின் தோற்றத்திலோ நீண்டு ஒல்லியாயிருப் பான்.- அவன் மயிர் கறுப்பாயிருக்கும் - அவன் கண்கள் நேர்த்தி யாயிருக்கும். அவன் - ஆம் எனக்கு நினைவிருக்கிறது - அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/131&oldid=1581386" இலிருந்து மீள்விக்கப்பட்டது