உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

103

மீசை வைத்திருக்கிறான்.” என்று சத்திரக்காரன் மறுமொழி புகன்றான்.

குமுதவல்லி திகில்கொண்ட குரலில் “உயரமாய் ஒல்லியாய் - கரியமயிரோடு" என்று சொல்லிக்கொண்டே "நல்லது நேற்றிரவு அவன் இங்கேயிருந்தபோது எவ்வாறு உடை அணிந்திருந்தான்?” என்று விரைந்து கேட்டாள்.

அதற்குச் சத்திரக்காரன் சொல்லுவான்; “உண்மையிலே, நான் அவன் உடையை நுணுக்கமாய்க் குறிப்பிட்டுப் பார்க்க வில்லை; என்றாலும் யான் நினைவிடக்கூடியமட்டில் அது சாதாவாகவும் சாமானியமாகவும் இருந்தது.என்றாலும், நீங்கள் யாரையேனும் சந்திக்கும்படி நேர்ந்து வேறுகாரணங்களால் அவரை நல்லான் என்று சந்தேகிக்கும்படியானால் அவன் உடை யைக்கண்டு ஏமாறிப்போகாதீர்கள்; ஏ ஏனென்றால் மலைமேலிருந்து பாய்ந்து தன் இரையை இறாஞ்சிக்கொண்டு போகுங் கழுகின் வேகத்தையும் தன்னை எதிர்ந்தோருடன் சண்டையிடும்பொழுது புலியின்வலிவையும் நல்லான் உடைய னாயிருப்பது போலவே சமயம் வந்தபோது தனது இரண்டகத் தைக் காட்டும் படியானநரிக்குள்ள தந்திரமும் அவனுக்கு உண்டு. ஆகவே எல்லா வகையான வேடங்களும் அவன் கையிலிருக் கின்றன. அவன் மலைப்பாங்குகளில் இருக்கும் பொழுது கள்வனைப்போல் கோலம் பூண்டவனாய் இருக்கலாம்; ஆனால் நகரங்களுக்குப் போவானாயின் சாமானிய குடியானவனைப் போலவும் இருக்கலாம். அஃதன்றி இன்னும் அவன் ஒரு துருக்கனைப் போலவும் பறங்கி வியாபாரி போலவும் பாரசீகனைப்போலவும் அல்லது யூதனைப் போலவுங்கூ கோலம்பூண்டு வருவான் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். சுருக்கமாய்ச் சொல்லுமிடத்துப் பெருமாட்டி! பலமுறைகளில் என்காதுகளுக்கு எட்டியவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லுவேனானால்-” என்று அவன் சொல்லி முடிவதற்குள் நடுவே குமுதவல்லி, "உமது சத்திரத்திற்கு அவன் எந்த நோக்கத்தோடு வந்திருக்கலாம் என்று நினைக்கின்றீர்?” என்று வினவினான்.

-

க்

அதற்குச் சத்திரக்காரன், "பெருமாட்டி! அதனை யார் சொல்லமுடியும்? ஒருகால் சில நேரம் இளைப்பாறவும் உணவு கொள்ளவும் வந்திருக்கலாம்: ஒருவேளை வீட்டிலேயே ஏதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/132&oldid=1581387" இலிருந்து மீள்விக்கப்பட்டது