உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் 13

பறித்துக் கொண்டு போகக்கூடுமா என்று பார்க்க வந்திருக் கலாம்; அல்லது ஒரு சமயம் பல திறப்பட்ட பயணக்காரர் கூட்டங்களும் இன்றைக்கு எந்த முகமாகப் போவார்களென்பது தெரிந்து கொண்டு அவர்களைப் பின் தொடர்தற்கும் வந்திருக்கலாம்; பின்னதுதான் பெரும்பாலும் நம்பத்தக்கதா யிருக்கின்றது. ஆ! அவன் தான் என்று மாத்திரம் நான் தெரிந்தே னானால் அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குத் தரப்படும் பரிசானது இவ்வருஷத்தில் எனக்குவரும் இலாபத்தை மிகுதிப் படுத்துவதாயிருக்கும்--காலம் நன்றாயில்லை என்பதைப் பார்க்கும்போது--” என்று உலகிலுள்ளவர்கள் எல்லாரும் வழக்க மாய் முறையிட்டுக் கொள்வதான கால நிலைமையைப் பற்றி அவன் விரித்துப் பேசப்புகுந்த அப்பொழுது;

நடுவே குமுதவல்லி, “அவன் புறப்பட்டுப் போன பிறகு நீர் தங்க வைத்தவன் கள்வர் தலைவனான நல்லானே என்று எப்படிக் கண்டு கொண்டீர்?” என்று வினாவினாள்.

“அந்தச்சண்டாளன்! ஒரு வழியிலன்றிப் பலவழியாய்ப் பிறர்க்குத் துன்பந்தரத் தெரிந்திருக்கின்றான். பெருமாட்டி! தங்கள் அறைக்கு மிகவும் எட்டியிராத தன் அறையிலிருந்தும் அவன் பாதியிரவிலே கீழ்இறங்கிக் குதிரை லாயத்திற்கு விரைந்து போய்க் குதிரைக்காரனைத் தட்டி எழுப்பித் தன் குதிரைக்குச் சேணம் இட்டு அவன் புறப்படுவதற்கு எத்தனம் பண்ணினதை எண்ணிப் பாருங்கள். ஆயினும், அவன் எனக்குத் தரவேண்டிய தாகைக்கு மேலே மிச்சமாகப் பணத்தை தன் மேசை மேல் வைத்து விட்டுப் போனான் என்று ஒத்துக் கொள்ளுகிறேன். சத்திரத்தின் முற்றத்திலே அவன் தன் குதிரை மேல் ஏறுந் தறுவாயில் ஒரு வழிப்போக்கன் உள்ளே வந்தான்; இவன் குடகு நாட்டு வியாபாரியாய் இருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன்; இவன் நேரங்கழித்து வந்தமையால் தன்னை ஏற்றுக் கொள்ளுவதற்கு யாரேனும் விழித்திருப்பதைப் பற்றி ஒருவாறு மகிழ்ச்சி அடைந்தான். ஆனால், அவ்வேழை வர்த்தகன் பந்த வெளிச்சத்தினால் புறப்பட்டுப் போகும் விருந்தினன் முகச்சாயலை பார்த்தவுடனே ஆ' எப்படி நடுநடுங்கினான்! அவனோ பறந்து போயினான், அவன் குதிரைக் குளம்படிகள் தெரு நெடுகக் கடகடவென்று விரைந்து ஓசையிட்டன; அவ்வோசை நெடுந் தூரத்தில் அவிந்துபோன பிறகு தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/133&oldid=1581388" இலிருந்து மீள்விக்கப்பட்டது