உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

105

நடுக்கமுற்ற அவ்வர்த்தகன் நல்லான் என்னும் பெயரைக் குழறலோடு சொல்ல வலிவு பெற்றான்." என்று சத்திரக்காரன் உரத்துச்சொன்னான்.

குமுதவல்லி ஆழ்ந்த சிந்தனையோடும், "ஆ! அவன் அங்ஙனம் பாதியிரவிலா போயினான்!” என்று பின்னும் தனக்குள்ளே “அப்படித்தான் இருக்க வேண்டுமென யான் கருதினேன்.” என்று சொல்லிக் கொண்டாள்.

66

'நல்லது பெருமாட்டி!" என்று பேச்சுக்காரனான, அச்சத்திரக்காரன் பேசத் தொடர்ந்தான், “கேட்டவர்களுக்குக் கிலியை உண்டாக்கும் நல்லான் என்று குதிரைக்காரன் தெரிந்தவுடனே, புறப்பட்டுப் போன அவ்விருந்தினனுக்குப் பின்னால் அவன் கூக்குரல் போடுவதற்கு நேரம் ஆகிவிட்டது; ஆகவே, என்னையும் என் ஊழியக்காரர்களையும் உடனே கூவி எழுப்பி அதனை அறிவிப்பது தேவையில்லை என்று அவன் எண்ணினான். ஆனால், விடிந்தவுடன் நேர்ந்தது இன்னதென அறிவிக்கப்பட்டேன்; உடனே யான் முதலிற் செய்த காரியம் அக்கள்வர் தலைவன் தங்கியிருந்த அறைக்குக் கடுகப் போனதே அவன் எதனையும் எடுத்துக் கொண்டு போகவில்லை. மேசை மேல் அகலமான ஒரு பொன் துண்டு வைக்கப்பட்டிருந்தது.”

இப்போது குமுதவல்லி தன்னறைக்கு முகமறைப்பு இட்டு வந்தவன் பயங்கரமான நல்லானைத் தவிர வேறு யாரும் அல்லர் எனச் சிறிதும் ஐயமின்றித் தெளிந்தாள்; கிலியை உண்டாக்கும் அக்கொள்ளைக்காரன் வசத்தில் தான் அகப்பட்டிருந்ததனை நினைக்கவே அவளுக்கு மிக்க நடுக்கம் உண்டாயிற்று. ஆனாலும், முன்னமே அவள் தன் தோழிமார்க்கு விளங்கப் பண்ணின காரணங்களால் நிகழ்ந்ததையேனும் மோதிரம் இழந்ததையேனும் சத்திரக்காரனுக்குச் சொல்லுவது தக்க தென்று அவள் எண்ணவில்லை: அப்படிச் சொல்லி யிருப்பாளானால் அவன் சந்தேகமின்றி அதனை நியாய விசாரனைக்குக் கொண்டுவரும்படி வற்புறுத்துவான்; அதனால் தாராளமாய்ப் பணங்கொடுக்கும் குமுதவல்லியானவள் தன் சத்திரத்திலே பல நாட்கள் தங்கியிருக்க நேரும் என்னும் நோக்கமும் அவனை அவ்வாறு செய்யும்படி தூண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/134&oldid=1581389" இலிருந்து மீள்விக்கப்பட்டது