உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

அதிகாரம் - 7 சந்திப்பு

நாகநாட்டரசியும் அவள் பாங்கிமாரும் ஏறியிருந்த குதிரைகள் மூன்றும் நல்லழகு வாய்ந்தவைகள். மெல்லிய அங்க ஒழுங்கோடு கூடியதொன்றாயினும், பூரண அழகு தரும்படி போதுமான வரையில் உறுப்புகளின் அளவு திரண்டு உருவாகிய குமுதவல்லியின் நீண்டவடிவானது அவள் குதிரை மேல் அமர்ந்த நிலையின் நயத்தாலும் அவளது செயற்கையல்லா இயற்கை நடையின் சீரினாலும், அச்சிறந்த பிராணியின் நடைகளுக்கு ஏற்ப அவள் துவண்டு தன்னை இசைவித்துக் கொள்ளும் இலகுவாலும்- சைவித்துக்கொள்ளும் -பின்னும் மிக்க எழில் உடைத்தாய் விளங்கித் தோன்றுவ தாயிற்று.

அவள் வழிப்பயணத்திற்கு ஏற்ற ஓர் அழகிய உடை அணிந்திருந்தாள். திறப்பாக விட்டிருந்த உட்சட்டையானது பொற்சரிகை பின்னப்பட்டிருந்தது--இச்சரிகைவேலையில் ஒரு பாகம் இவள் தானே தன் ஓய்வு நேரங்களிற் செய்தது, மற்றொரு பாகம் இவள் தோழிமாரின் திறமையாலும் நுண்ணறிவாலும் செய்யப்பட்டது. அதற்கு அடியிலே அணியப்பட்டிருந்த கீழ்ஆடையானது தொண்டைவரையிற் கட்டப்பட்டிருந்தது. அது வடிவத்திற் பொருந்திய அமைவினால் மார்பிற்றிரண்ட கோள வடிவை வரைபெறக் காட்டியது.உட்சட்டையின் குறுகிய கைகளானவை பால்போன்ற வெண்மை நிறத்தோடு வியப்பாக உருவமைந்த முன் கைகளைப் பெரும்பாலும் வெளியே காட்டின. அக்கையின் தெளிவாகிய தோலோ நீலநரம்புகளின் மெல்லிய சுவடுகளைப் புலப்படக் காட்டியது. இடுப்பின்கீழ் உடுக்கப்பட்டு முழங்கால் வரை யிற் றொங்கும் மேலாடையானது பெரிய பொற் சரிகைக்குஞ்சம் உடைய தாயிருந்தது; இதற்குக் கீழே உடுக்கப் பட்டிருந்த சிறுநிறமுள்ள நீண்ட பட்டாடைமேல் அணியப்பட் டிருந்தமையால் இஃது அவ்வுடுப்பின் அழகை

ஃது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/137&oldid=1581393" இலிருந்து மீள்விக்கப்பட்டது