உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

109

மிகவுஞ் சிறப்பித்துக் காட்டுவதாயிற்று. மெல்லிய வெண் சல்லாவினாற் செய்யப்பட்ட முக்காட்டு ஆடையானது அவள் முடிமேலிருந்து முதுகின் கீழ்த் தொங்கியது--அது சிலவேளை வீசிய சிறுகாற்றிலே பறந்தது--சில வேளை குதிரை உடம்பின் மேல் அலை அலையாய் அழகுடன் மிதந்து கிடந்தது.

இளம்பெண்கள் இருவரும் தம் இளம்பெருமாட்டி உடையினும் விலைமிகக் குறைந்ததே உடுத்திருந்தார் களாயினும், அவ்வுடை அழகிற் குறையாதாய் நாகரிகமும் நேர்த்தியும் வாய்ந்ததாயிருந்தது.. குமுதவல்லியும் அவள் தோழிமாரும் சைவ சமயத்திற் சேர்ந்தவர்களா யிருந்தமையால் ஏனை வடநாட்டுப் பெண்களின் வழக்கம்போல் தமது முகங்களை முழுதும் முக்காட்டினால் மறைத்துக் கொள்ள வேண்டு மென்னும் ஏற்பாடு உடையவர்களாய் இல்லைஎன்பதை ல்லைஎன்பதை இதனைப் படிப்போர் நினைவில் வைக்க வேண்டும்.

அவ்வழகிய பெருமாட்டியும் நல்ல தோற்றமுள்ளஅவள் பாங்கிமார் இருவரும் ஆக மூவரும் நன்றாகச் சேணம் இடப்பட்ட குதிரைகளின் மேல் அமர்ந்து, தமக்குப்பின் துணையாய்ப் படை தாங்கி வந்த நீலகிரி நாட்டு மக்கள் பன்னிருவரின் மிக வேறாய் விளங்கிய தோற்றமானது மிகவும் மனத்திற்கு இனியதாயிருந்தது. சத்திரத்தைவிட்டுப் புறப்பட்ட பிறகு முதலிற் சில நாழிகை தூரம் வரையில் விசேடமான சம்பவம் ஏதும் நிகழவில்லை; ஆனால், கடைசியாக நாகநாட்டரசியும் அவள் பாங்கிமாரும் ஐந்து நாழிகை நேரம் இளைப்பாறவும் அவர்கள் குதிரைகளை இளைப்பாற்றவும் இப்போது வழித்துணையாக வந்தவர்கள் அவர்களைப் பிரிந்து போகவும் வேண்டிய ஓரிடம் வந்து சேர்ந்தது.குமுதவல்லி இப்போது தன் பாங்கிமாரோடு மாத்திரம் பிரயாணம் போவதா--அல்லது வேறொரு துணையைத் தேடிக் கொள்வதா என்று தீர்மானிக்க வேண்டியவளானாள். நாம் முன்னமே மொழிந்த காரணங்களைக் கொண்டு அவள் முந்திய ஏற்பாட்டின்படி நடக்க எண்ணங் கொண்டாள்.ஆனால் இந்தத் தங்குமிடத்தில் வந்த ஒரு செய்தியினால் அவள் தான் கொண்ட இவ்வெண்ணத்தை மாற்ற வேண்டியவளானாள். இச்செய்தி நல்லானைப் பற்றியதன்று--மற்று இஃது அக்கொள்ளைக் காரனைவிடத் திகில் கொள்ளத்தக்க ஒரு பகைவனைப் பற்றிய தாகும். சுருங்கச் சொல்லுங்கால், அங்கே அடுத்துள்ள இடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/138&oldid=1581395" இலிருந்து மீள்விக்கப்பட்டது