உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் 13

வழிதப்பித்திரியும் ஒரு புலியானது தென்பட்டது. சுந்தராம் பாளும் ஞானாம்பாளும் இச்செய்தியைக் கேட்டுத் துயரத்தோடு திடுக்கிட்டார்கள்; குமுதவல்லியும் தான் அச்சமில்லாதவளாய் இருக்கவில்லை. ஆகவே படைக்கலம் பூண்ட இரண்டு ஆண் மக்களை வழித்துணை கொள்ளும்படி தீர்மானஞ் செய்யப் பட்டது. இந்த ஏற்பாடானது பிறகு முறையே கைக்கொள்ளப் பட்டது.

திரும்பவுங் குமுதவல்லி தன் பாங்கிமாரோடும் வழித் துணையாகக் கொள்ளப்பட்ட இரண்டு வலிய நீலகிரி நாட்டாருடனும் பயணம் புறப்பட்டபோது ஏறக்குறையப் பிற்பகல் இருபத்திரண்டு நாழிகையாயிற்று. இவ்வாண்மக்கள் இருவரும் உடம்பெங்கும் படைகள் தாங்கி வலிய குதிரைமேல் ஏறியிருந்தார்கள்: அக்கொடிய மிருகம் கண்ணுக்கு எதிர்ப் பட்டால் உறையினின்றுங் கைத்துப்பாக்கிகளை இழுப்பதற்கு அவர்கள் தம் கைகளை ஆயத்தமாக வைத்திருந்தார்கள். அவர்கள் போன வழியானது அந்நாட்டின் அழகிய ஓரிடத்தின் ஊடே சென்றது--அங்கே பழங்களைச் சுமை சுமையாய்த் தாங்கிய மரங்களும், பழக்குலைகள் நிறைந்து கனத்திருக்கின்ற கொழுமையுள்ள கொடிமுந்திரிகளும் பாதைகளுக்கு நிழலைத் தந்து சந்து வழிகளுக்குத் திரைமறைப்புப் போல் இருந்தன; இன்னும் அங்கே பச்சென்ற வரம்புகளின் பின்னே, அகன்ற பெரிய இடங்கள் பூசணிப்பழங்களாலும் கொம்மட்டிப் பழங்களாலும் மூடிப்பட்டிருந்தன--இது பலவகைப் பழங்களும் தாமே வளர்ந்து செழிக்குங்காடாயிருந்தது!

L

கடைசியாகத் தங்கிய இடத்தினின்றும் அவர்கள் புறப்பட்டு வந்த பிறகு இரண்டரை நாழிகை கழிந்தது; இச் சமயத்தில் சிறிது தூரத்திலேயிருந்து தாழ்ந்த உறுமல் ஒலியொன்று தொடர் பாய்வரக் கேட்டாற்போல் குமுத வல்லிக்குப் பட்டது; உடனே கடிவாளத்தைப் பிடித்துத் தன் குதிரையை நிறுத்திக் கொள்ளவே, சிலஅடி பின்னேயிருந்த அவள் பாங்கிமாரும் வழித் துணைவரும் ஒரு ரு நொடியிற் கிட்ட வந்து சேர்ந்தார்கள். சுந்தராம்பாளும் ஞானாம்பாளும் அவ்வாறே அவசகுனமான அவ்வோசையைக் கேட்டார்கள். அவர்கள் முகங்கள் திகிலால் வெளுப்பு நிறம் அடைந்தன. ஆனால் அந்த நீலகிரி நாட்டார் இருவரும் விரைவில் அஞ்சாமொழிகள் சொல்லி, அப்பெண்மக்களைத் தமக்கு நடுவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/139&oldid=1581396" இலிருந்து மீள்விக்கப்பட்டது