உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

111

நிறுத்திக் கொள்ளும் வகையிலே தாம் நின்று கொண்டார்கள். அவர்கள் கைத்துப்பாக்கிகள் அவர்கள் கைகளில் ஏற்கெனவே எடுக்கப் பட்டிருந்தன: அவர்களின் சுறுசுறுப்பான கூரிய கண்களானவை சுற்றிலும் தம் பார்வையைச் செலுத்தின.

சில நிமிஷங்கள் வரையில் ஏதும் அரவம் இல்லாமல் இருந்தது; ஆனால், திடீரென்று ஊளை போலவும் உறுமுதல் போலவும் பயங்கரமான ஓர் ஓசை உண்டாயிற்று. அதன்பிறகு “மரங்களின் இடையே சர சர வென்றும் நெறு நெறு வென்றும் ஓர் ஓசை உடனே தொடர்ந்து வந்தது; கொடி முந்திரி மறைப்பினின்றும் ஒரு பெரும் புலி கிட்ட இருக்க நீலகிரி நாட்டான் மேற் பாய்ந்தது. உடனே அம்மனிதன் கையிலிருந்த இரண்டு கைத்துப்பாக்கிகளும் வெடி தீர்ந்தமை கேட்டது. சுந்தராம்பாள் ஞானாம்பாள் இதழ்களிலிருந்து கீச்சென்று ஓர் ஒலி உண்டாயிற்று. - குமுதவல்லியிடத்திலிருந்து கூடத் திகிலோடு கூடிய ஓர் ஒலி உண்டாயிற்று; இவர்கள் ஏறியிருந்த குதிரைகளோ அடக்க முடியாதவாயின. துர்பாக்கியனான அம்மனிதன் குதிரையினின்று புலியினால் கீழே இழுக்கப் பட்டான்: அவனுதவிக்காக அவன்தோழன் கிட்டே ஓடினான்; ஆனால், அப்பிராணியோ தன் பகைவரை ஒருவர்பின் னொருவராக வெல்லுவதற்குத் தீர்மானித்தாற்போலத் தன் இரண்டாம் பகைவன்மேல் பயங்கரமாக ஒரு குதியிற் பாய்ந்தது.

இந்தக்காட்சியானது பார்ப்பதற்கு மிகவும் கோரமாயும், பயங் கரமாயும் இருந்தது. திரும்பவும் கைத்துப்பாக்கிகளின் அதிர்வெடி கேட்டது: அக்கொடிய மிருகமானது காயப்படுத்தப் பட்டது ஆனாலும் கொல்லப்படவில்லை. மற்று அது தான் பட்ட காயத்தினால் வெறிபிடித்துத் திகிலான கறுசுறுப்பு உடையதாயிற்று. தன்குதிரையிலிருந்து இடியேறுண்டு தள்ளப் பட்டாற்போல இரண்டாம் மனிதன் கீழே இழுத்துப் போடப் பட்டான்; அப்போது இரத்தம் ஒழுகும் வெறிகொண்ட குதிரைகள் இரண்டும் ஊர்வோன் இல்லாதனவாய்க் காற்றினால் இறக்கை வாய்ந்தனபோல் பறந்து சென்றமை காணப்பட்டது. அதே சமயத்தில் குமுதவல்லியும் அவள் பாங்கி மாரும் ஏறியிருந்த குதிரைகளும் அச்சமுற்று அடங்காதனவாய்ப் பலமுகமாய் விரைந்து ஓடின. இங்ஙனம் எல்லாம் பெருந் தடுமாற்றமாய் இருப்பதற்கு நடுவே கடிகாரத்தில் நிமிஷங் காட்டும் முள்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/140&oldid=1581397" இலிருந்து மீள்விக்கப்பட்டது