உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் 13

-

நிமிஷங்களை அடுத் தடுத்துக் காட்டுவதுபோல ஒவ்வொன்றும் ஒன்றன்பின் னொன்றாய்க் கடுகிவரும். இப்பொழுது மறுபடியும் துப்பாக்கி களின் வெடிகள் கேட்டன. அந்தப் புலியானது மரண வேதனை ஊளைக்குரலோடு நிலத்தேகிடந்து புரண்டது மறுபடியும் மற்றொரு குண்டு அப் பிராணியின் மண்டைக்குள் நெறு நெறு வென்று தொளைத்துச் செல்லும்படி அவ்வளவு திட்டமாய்க் குறிவைத்துச் சுடப் பட்டது; அடுத்தாற்போல் மூன்று பேர் குதிரைமேல் அவ்விடத் திற்கு விரைந்து வந்தார்கள்.

6

அதற்குள் குமுதவல்லி தன் குதிரையை முற்றுந் தன் வசத்தில் அடக்கிக் கொள்வதானாள்; அந்தக் கோரமான சண்டை நடந்த இடத்திற்கு நெடுந்தூரத்திலே அவள் இப்போது இருந்தாலும், ஆபத்து ஒழிந்தது என்பதனை அவள் அறிகுறியாக ஆர்ப்பரித்துக் கூவுவோர் ஓசையைக் கேட்டனள்.குதிரை ஊருந் திறத்தில் தம் தலைவியை எதிரவல்லவர்களான சுந்தராம்பாள் ஞானாம்பாள் இருவரும் தம் குதிரைகள் தம் உடைகள் சிறிது கீறுண்டு கிழியும்படி கொடிமுந்திரி அடர்ந்த இடங்களின் ஊடே விரைந்து சென்றாலும் அவற்றின்மேல் தமது இருக்கை கலையாதவண்ணம் அங்ஙனமே இருந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் உயிரோடு தப்பிப்பிழைத்ததையும் இரண் டாரு கீறல்தவிர வேறு காயம் தம் உடம்பிற் படாமையையும் எண்ணிப்பார்க்கும்போது இஃது ஒருபொருட்டாக வைத்துச் சொல்லற்பாலதன்று

உற்றசமயத்தில் அவ்விடத்திற்குக் குதிரைமேல்வந்த மூவரின் தலைவனானோன் - தன் கூட வந்தோர் இருவருக்கும் சுருக்கெனச் சில கற்பித்துவிட்டு, இதற்குள் தமது தடுமாற்றம் நீங்கித் தேறி அந்தப் பாதையில் சிறிது தூரத்தே ஒன்றுகூடி நின்ற குமுதவல்லியையும் அவள் பாங்கிமாரையுஞ் சந்திக்கும் பொருட்டுக் குதிரையை முன்னே பாய்ச்சலிற் கொண்டு போனான். அங்ஙனம் நயம்மிகுந்த வணக்கத்தோடும் தேறுதல் மொழிகளோடும் அந்தப்பெண்மக்களை விரைந்து அணுகி னவன் ஓர் அழகிய பௌத்த இளைஞனாயிருந்தான். நாகரிகமும் இ னிய அழகும் வாய்ந்த இவ்விளைஞன் நீலலோசனனேயன்றிப் பிறர் அல்லரென்றும், இவனுடன் வந்தோர் இருவரும் கேசரி வீரனும் வியாக்கிரவீரனு மாவரென்றும் இதனைப்படிப் போர்க்கு உடனே தெரிவித்திடுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/141&oldid=1581398" இலிருந்து மீள்விக்கப்பட்டது