உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் - 13

சில நிமிஷங்களுக்கெல்லாம் யான் உங்களிடம் மறு படியும் வந்து நீங்கள் தயாள சிந்தை வைத்துள்ள அம்மனிதர் களின் நிலைமையை அறிவிக்கின்றேன்.” என்று நீலலோசனன் மறுமொழி கூறினான்.

மறுபடியும் மரியாதையோடு வணங்கி நீலலோசனன்தன் குதிரையைத் திருப்பிக் குமுதவல்லியையும் அவள் பாங்கி மாரையும் விட்டு அகன்று போயினான்.

அதன்பிறகு குமுதவல்லி, “சிறிதுநேரம் நாம் குதிரையை விட்டுக் கீழே இறங்குவோம். அத்துர்பாக்கிய மனிதர் இருவரும் எல்லாவகையாலும் செவ்வையாகப் பராமரிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் உறுதியாகத் தெரிந்துகொண்டால் அல்லாமல் நாம் பயணம் தொடங்கலாகாது. அதுவல்லாமலும் நம் குதிரைகள் எல்லாம் இன்னும் நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றன.

ச் சழும் புல்லை அவைகள் மேயும்படிவிட்டால், அஃது அவ்வேழைப் பிராணிகளை ஆற்றுவிக்கும்.” என்று நாக நாட்டரசி கூறினாள்.

அவ்வாறே, குமுதவல்லி, சுந்தராம்பாள், ஞானாம்பாள் மூவரும் குதிரையைவிட்டு இறங்கினார்கள்: அவர்கள் குதிரை கள் பாதையோரமாய்த் திரியும்படி விடப்பட்டன; ஏனினில், நுண்ணறிவும் நம்பிக்கையும் உள்ள அப்பிராணிகள் ஒவ்வொன் றுந் தன் தலைவி அழைக்கும்போது உடனே திரும்பிவரும் வழக்கம் உடையது.குமுதவல்லி தான் ஒரு கரைமேல் உட்கார்ந்து காண்டு தன் றோழிப் பெண்களும் அவ்வாறே இளைப்பாறுக வன்று சைகை காட்டினாள்.

“நல்ல காலமாயிற்று, அப்பௌத்த துரைமகனும் அவர் ஆட்களும் அச்சமயத்தில் வரலானது!” என்று நாகநாட்டரசி மொழிந்தாள்.

66

எவ்வளவு அழகான ளைஞர் அவர்!" என்றாள்

சுந்தராம்பாள்.

66

அவர் பார்வையில் சுத்தவீரனே- என்றாலும் இளமையும் அழகும் வாய்ந்தவர்!” என்று கூடச்சொன்னாள் ஞானாம்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/143&oldid=1581401" இலிருந்து மீள்விக்கப்பட்டது