உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் 13

அந்நங்கையை முன்பின் முழுதும் அறியாதவனா யிருக்குந்தான் அவள் அடைந்த செலவுக் காகத்தான் பொருள் சலுத்துவதாயிருக்கும். இதனைப்பற்றி வற்புறுத்துதல் தனக்கு மென்னடையும் தகுதியும் ஆகாதெனப் பௌத்த இளைஞன் உடனே கண்டு கொண்டான்; ஆகவே, அப்பொன் நாணயங் களைத் தான் வாங்கிக்கொண்டபோது, “காயப்பட்ட அவ் வேழை மனிதர் இருவரையும் பற்றி யான் முதலிற் காண்ட நோக்கத்தையும் நிறைவேற்றுதலிற் சிறிதும் குறையேன்; எனவே, அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஈடு இரட்டை நன்கொடை யாகும்.” என்று கூறினான்.

-

ங்ஙனஞ் சொல்லிவிட்டு அங்கிருந்து மறுபடியும் அவன் திரைமேற்போக எழுந்தான் அபோது அவனுக்கு ஓர் எண்ணந்தோன்றவே, “நங்கைமீர்" இப்போது நீங்கள் வழித் துணை இன்றி யிருத்தலால், யானும் என் ஆட்களும் எங்களால் இயன்றளவு செய்துவரக்கூடிய காவலையும் பாதுகாப்பையும், தாங்கள் ஏற்றுக்கொள்ள அருள் செய்வீர்களாக! நாங்கள் நீலகிரியை நோக்கிப் பயணஞ் செல்பவர்களாய் நேர்ந்தோம்: காயப்பட்ட மனிதரில் ஒருவன் சிறிதுமுன்னே சொன்ன சிலவற்றிலிருந்து நீங்கள் செல்லவேண்டிய இடமும் அதுவே யெனத் தெரிந்தேன்.” என்று கூறினான்.

குமுதவல்லி ஏது விடைசொல்வதென்று சிறிது நேரந் தடைபட்டாள்: ஆனால், தன்றோழிமார்களைக் கண்நோக்கவே அவர்கள் உருக்கமுடன் வேண்டிக்கொள்ளுங் குறிப்போடு தன்னை உற்றுப்பார்த்துக் கொண்டு இன்னது சொல்வதென்று விரைவில் தீர்மானித்தாள்.

“கனவானே! இப்பயங்கரமான சம்பவத்திலிருந்து யான் அடைந்த அனுபவமானது,. தாங்கள் இவ்வளவு தயாளத்தோடு செய்யும் உதவியை மறுத்தல் எனக்கு மூர்க்கத்தனமாய் முடியுமென்றும், நடுநடுங்கும் என் பெண்களாகிய இவர்கள் நிலைமையை எண்ணிப்பாராக் கொடுமையாகு மென்றும் எனக்குக் காட்டுகின்றது. ஆகையால், இவ்வுதவியை யான் நன்றியறிதலோடு ஏற்றுக் கொள்ளுகின்றேன்” என்று விடை பகர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/145&oldid=1581403" இலிருந்து மீள்விக்கப்பட்டது